twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரியங்கா சோப்ரா 'அரபு தீவிரவாதி'யாம்.. அமெரிக்கர்களின் திமிர்த்தனம்!

    By Sudha
    |

    டெல்லி: அமெரிக்காவுக்குத் தான் சென்றிருந்தபோது அங்கு இனவெறி தாக்குதல்களை தான் எதிர்கொண்டதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

    அங்குள்ள கால்பந்து ரசிகர்கள் பலர் தன்னை அரபு தீவிரவாதி போல சித்தரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    அமெரிக்கர்களுக்கு அவர்களை யார் சீ்ண்டினாலும் பிடிக்காது. ஆனால் அவர்கள் ரெஸ்ட் ஆப் உலகத்தைச் சேர்ந்தவர்களை எப்படி வேண்டுமானாலும் கிண்டலடிப்பார்கள். இப்போது அவர்களின் கிண்டலுக்கு அதுவும் இனவெறிக் கிண்டலுக்குள்ளாகியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

    இனவெறித் தாக்குதல்

    இனவெறித் தாக்குதல்

    இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு பிரியங்கா சோப்ரா கொடுத்துள்ள பேட்டியில், அமெரிக்காவில் தான் இனவெறி தாக்குதலை எதிர்கொண்டதாக குமுறியுள்ளார்.

    அரபு தீவிரவாதியாக சித்தரித்த ரசிகர்கள்

    அரபு தீவிரவாதியாக சித்தரித்த ரசிகர்கள்

    அங்குள்ள கால்பந்து லீக்கைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் தன்னை அரபு தீவிரவாதியாக சித்தரித்து கேலி செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார் பிரியங்கா.

    கேடு கெட்ட திமிர்த்தனம்

    கேடு கெட்ட திமிர்த்தனம்

    இதுகுறித்து பிரியங்கா மேலும் கூறுகையில், என்னைப் பார்த்து அரபு தீவிரவாதி என்று ரசிகர்கள் சிலர் கத்தியதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். ஒருவரின் நிறத்தை வைத்து இப்படிப் பேசுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

    இவர்களெல்லாம் எனக்குத் தூசு

    இவர்களெல்லாம் எனக்குத் தூசு

    ஆனால் இப்படிப்பட்டவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியும். என் மீது வீசி எறியப்படும் கற்களையும், மலர்களையும் நான் உரிய முறையில் ஏற்பேன், சந்திப்பேன் என்றார் பிரியங்கா.

    கண்டுகொள்ள மாட்டேன்

    கண்டுகொள்ள மாட்டேன்

    இப்படிப்பட்ட விமர்சனங்களை நான் கண்டு கொள்வதே இல்லை. அப்படிப்பட்டவர்களை நான் புறக்கணித்து விடுவேன் என்றும் கூறியுள்ளார் பிரியங்கா.

    English summary
    In a recent interview to The Wall Street Journal, Bollywoods leading actress Priyanka Chopra has revealed that she faced racist attacks and was even tagged as “an Arab terrorist” by fans of a football league in America sometime back. The actress was left in a state of complete shock after being called a terrorist and believed that one shouldn’t be passing such remarks on the basis of one’s skin colour.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X