Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நட்சத்திர கிரிக்கெட் தூதராக த்ரிஷா தேர்வு - 'பலநாள் காத்திருப்பு நிறைவேறியது!'
சென்னை: சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் சென்னை அணி தூதராக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட, போஜ்புரி மொழி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பிப்ரவரி மாதம் நடக்கிறது. தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி கேப்டனாக விஷால் உள்ளார்.
இந்த அணிக்கு விளம்பர தூதுவராக பணியாற்ற நடிகை தேர்வு நடந்தது. தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் திரிஷா தேர்வாகியுள்ளார். இதற்காக அவருக்கு கணிசமான தொகை சம்பளமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அணிக்கு விளம்பர தூதுவராக தேர்வானது குறித்து திரிஷா கூறுகையில், "சென்னை ரைனோஸ் அணிக்கு தூதுவராகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக இந்த பொறுப்புக்கு நான் பரிசீலிக்கப்பட்டேன். பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. முதல் தடவையாக எனக்கு பிடித்த சென்னை அணிக்கு விளம்பர தூதுராகி உள்ளேன். நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்றார்.
சமீபத்தில்தான் சென்னை நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு நான் தூதராக இல்லை. ஏனோ என்னை தேர்வு செய்யவில்லை என்று ஏக்கத்துடன் அறிக்கை விட்டிருந்தார் த்ரிஷா. இப்போது அவர் ஏக்கம் நிறைவேறிவிட்டது.