மகேஷ் பட் படத்தில் பிரபல 'செக்ஸ்' நடிகை சன்னி லியோன்!

திங்கள்கிழமை, ஜனவரி 23, 2012, 13:32 [IST]
பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் இயக்கும் ஜிஸ்ம் 2 படத்தில் முக்கியமான வேடம் எற்றுள்ளார் பிரபல புளூ பிலிம் நடிகையான சன்னி லியோன்.

கனடாவில் பிறந்து செட்டிலாகிவிட்டவர் சன்னி லியோன். உலகின் டாப் செக்ஸ் பட நடிகையாகத் திகழ்கிறார். இதற்கென தனி வெப்சைட்டெல்லாம் வைத்து, தனது ஆபாசப் படங்கள், தான் நடித்த செக்ஸ் படங்களைப் பார்க்க டாலர்களில் கட்டணம் வசூலிக்கிறார்.

இப்போது இவருக்கு இந்தியாவிலிருந்து ஏகப்பட்ட வாய்ப்புகள்... நடிக்கத்தான்!

ஏற்கெனவே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அடுத்து மகேஷ் பட் இயக்கும் ஜிஸ்ம் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால் இதை மறுத்து வந்தனர் படக்குழுவினர்.

இந்த நிலையில் ஜிஸ்ம் 2 பட போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இதில் மெல்லிய வெள்ளை ஈரத்துணி போர்த்திய ஒரு பெண்ணின் படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெண் வேறு யாருமல்ல.... செக்ஸ் ஸ்டார் சன்னி வியோன்தான் என்று அறிவித்துள்ளார் இயக்குநர் மகேஷ்பட்.

இந்தப் படத்தில் அவர் பாலிவுட்டின் பிரபலமான 'மெஹபூபா...' பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளாராம். ஷோலேயில் இந்தப் பாட்டுக்கு ஒரிஜினலாக நடனம் ஆடியிருந்தவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை ஹெலன் என்பது குறிப்பிடத்தக்கது!
English summary
The mystery girl behind the wet white sheet in the Jism 2 poster has finally been unveiled. Filmmaker Mahesh Bhatt confirmed that the leading lady of the film is Indian Canadian porn star Sunny Leone.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST