'தம்' அடித்தபோது திடீரென வலிப்பு வந்து மயங்கிய ஹாலிவுட் நடிகை டெமி மூர்!

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 29, 2012, 10:12 [IST]
Demi Moore
லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் நடிகை டெமி மூர் தனது வீட்டில் திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்ததால் அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவர் புகை பிடித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததால் கஞ்சா உள்ளிட்டவற்றை சேர்த்து பிடித்தாரோ என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றும் நைட்ரஸ் ஆக்ஸைடை நுகர்ந்ததால்தான் மயக்கமும், வலிப்பும் வந்ததாக கூறப்படுகிறது.

49 வயதாகும் டெமி மூர் தனது லாஸ் ஏஞ்சலெஸ் வீட்டில் புகை பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பும், மயக்கமும் வந்துள்ளது. இதனால் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவசர போலீஸாருக்குப் போன் போனது.அவர்கள் மருத்துவப் படையினருடன் விரைந்து வந்து டெமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் புகை பிடித்ததால் மயங்கி விழவில்லை என்றும் அருகில் இருந்த ஒரு கேனிலிருந்து வெளியான சிரிப்பூட்டும் வாயு எனப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு கசிந்து அதை நுகர்ந்தாதல்தான் இந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்தபோது டெமியுடன் அவரது தோழி ஒருவரும் உடன் இருந்தார்.
English summary
Demi Moore was rushed to hospital and amid reports that she was battling anorexia, new reports have suggested that she collapsed following a bad reaction to laughing gas. The 49-year-old tried a "quick high" by inhaling nitrous oxide out of a canister that is often used in whipping cream cans, and she passed out which led to the star being rushed to hospital.
User Comments
Nimirnthamani Gawnder 31 Jan 2012 01:51 pm
பிரபலங்களாக உள்ளவர்கள் palar (உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்)போதைக்கு அடிமையானவர்களே. அதிலும் சிலர் தம்மை ஞான மார்கத்தை கைகொள்பவராக பாவனைகாட்டிக்கொண்டு போதை இன்பம் அனுபவிப்பது திரைக்குவராத உண்மைக்கதை .அடிக்கடி மலையேறும் சித்தர்களும், ஞானிகளும் கூட நாட்டுக்கஞ்சா முதல் சீமை கெரோயின் வரையில் தமது டேஸ்ட்டுக்கு ஏற்ப அடிப்பதே வழமை . இதெல்லாம்பிரபலங்களுக்கு சகசமப்பா !
Ravudi 29 Jan 2012 12:48 pm
அப்படின்னா சிரிப்புதான வரும் பிறகு எப்படி மயக்கம் ??????????
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST