twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சொர்க்கத்திற்கு போனேன், கடவுளின் மடியில் அமர்ந்தேன்: 4 வயது சிறுவன் கூறியதை படமாக்கிய ஹாலிவுட்

    By Siva
    |

    நியூயார்க்: உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் சொர்க்கத்திற்கு சென்று இயேசுநாதரை சந்தித்தாக கூறியதை வைத்து ஹாலிவுட்டில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தைச் சேர்ந்தவர் டாட் பர்போ. தேவாலயத்தில் பாதிரியராக இருப்பவர். அவரது மகன் கால்டன் பர்போ(14). கால்டனுக்கு 4 வயது இருக்கையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கால்டனின் பேச்சு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    அந்த சிறுவன் அறுவை சிகிச்சையின்போது தனக்கு என்ன நடந்தது என்று கூறுகையில்,

    நான் சொர்க்கத்திற்கு சென்றேன். அங்து இயேசு நாதரின் மடியில் அமர்ந்தேன். அவரது கண்கள் நீள நிறத்தில் ஒளி வீசின. அங்கு நான் தேவதைகளை பார்த்தேன். சொர்க்கத்தில் என்னை என் கொள்ளு தாத்தா கட்டி அணைத்தார்.(கால்டன் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.). மேலும் சொர்க்கத்தில் எனது சகோதரியை சந்தித்தேன். (கால்டனின் தாய்க்கு கருச்சிதைவு ஏற்பட்டது).

    கடவுள் என்னை அனைவரிடமும் அன்பாக இருக்குமாறு கூறினார் என்றார்.

    சிறுவன் கூறியவற்றை அவரது தந்தை ஒரு புத்தகமாக எழுதினார். கடந்த 2010ம் ஆண்டு வெளியான ஹெவன் இஸ் ஃபார் ரியல் என்ற அந்த புத்தகம் 10 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டன. மேலும் அந்த புத்தகம் 39 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த புத்தகத்தின் அடிப்படையில் ஹெவன் இஸ் ஃபார் ரியல் என்ற பெயரில் ஹாலிவுட் படம் எடுக்கப்பட்டு கடந்த மாதம் 16ம் தேதி ரிலீஸ் ஆனது. புத்தகத்தை போலவே படமும் ஹிட்டாகியுள்ளது.

    English summary
    Colton Burpo(14) said he went to heaven and sat on God's lap while he was in an operation theatre at the age of four. His father Todd wrote a book on his experience of heaven. Now the movie Heaven is for real which is based on Colton's story is doing good in the box office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X