நான் ரஜினி ரசிகன்... அதனால் அவர் படத் தலைப்புகளை வைக்கிறேன் - சுராஜ்

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2012, 15:58 [IST]
Rajini Movie
இன்றைய இயக்குநர்களில் ரஜினி படத் தலைப்புகள், கதை, பாடல்களை அதிகமாக பயன்படுத்தியவர் சுராஜ்தான். தனது அடுத்த படத்துக்குக் கூட அவர் மூன்று முகத்தில் ரஜினியின் புகழ்பெற்ற பெயரான அலெக்ஸ் பாண்டியன் என்பதையே தலைப்பாக்கியிருக்கிறார்.

அவரிடம், நீங்கள் இப்படிச் செய்வது ரஜினியின் புகழ்பெற்ற படங்களை பின்னுக்குத் தள்ளுவது போல் இல்லையா... இன்றைய தலைமுறையினருக்கு அந்தப் படம் குறித்து தெரியாமலே போக வாய்ப்பிருக்கிறது அல்லவா? என்று கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், "நான் ரஜினியின் தீவிர ரசிகன். என் புதுப்படங்களுக்கு தலைப்பு தேர்வு செய்யும் போதெல்லாம் ரஜினி பட தலைப்புகள்தான் நினைவுக்கு வரும். இதனை அவருக்கு செய்யும் மரியாதையாகவே நான் பார்க்கிறேன். அதேநேரம், இதுபோல செய்வதால் பழைய படங்கள் குறித்து தெரியாமல் போகும் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.

அலெக்ஸ் பாண்டியன் என்பது மூன்று முகம் படத்தில் உள்ள ரஜினியின் பாப்புலரான கேரக்டர். இதனைப் பயன்படுத்துவதால், எந்த பாதிப்பும் இருக்காது.

மூன்று முகம் படத்தில் அலெக்ஸ்பாண்டியன் என்பது ரஜினியின் போலீஸ் கெட்டப் பெயர். கார்த்தி அதுபோன்ற கேரக்டரில் இதில் வரவில்லை.

இருந்தாலும் ரசிகர்களின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் ரஜினி சார் பெயருக்கு புகழ்சேர்க்கும் வகையில்தான் என் படம் இருக்கும்," என்றார்.

இன்றைய நிலவரப்படி, ரஜினியின் படத் தலைப்புகளை அதிகம் பயன்படுத்தியிருப்பவர்களில் முதலிடம் தனுஷ் - சுராஜுக்குதான்!
English summary
Most of the young directors trying to cash Rajini's name and his popular movie titles in the name of fan or admirer. Director Suraj is one such guy who made most of his films with Rajini's super hit movie titles like Padikkathavan, Maappillai and now titling his forthcoming as Alex Pandian.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST