தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? - தமன்னா

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 10, 2012, 16:29 [IST]
தமிழ்ப் படங்களில் நடிக்காமல் போனதற்குக் காரணம், நல்ல கதை அமையாததுதான் என்று தமன்னா தெரிவித்தார்.

தமிழில் கடந்த ஆண்டு வரை முன்னணியில் இருந்த நடிகை தமன்னா, இந்த ஆண்டு கையில் ஒரு படம் கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

அவர் முழுவதுமாக தெலுங்கிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் நடிகர் ஒருவருடன் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் தமன்னா இதுகுறித்து கருத்து கூற மறுத்துவந்தார்.

இந்த நிலையில் தமிழில் மீண்டும் எப்போது நடிப்பார் என்பது குறித்து அவரிடம் கேட்டபோது, "எனக்கு படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை. தரமான படங்களாக இருக்க வேண்டும். எந்த மொழியாக இருந்தால் என்ன...

சில நடிகைகள் ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களில் நடிக்கின்றனர். அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த நடிகைகளை போல் நான் இருக்கமாட்டேன். நிறைய படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பது பயன்தராது.

ஏற்கனவே கைவசம் உள்ள தெலுங்கு படங்களை முடிக்காமல் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் இதனால் தயாரிப்பாளர்கள். என் மேல் கோபமாக இருப்பதாகவும் வெளியான தகவல் உண்மையானது அல்ல.

மகேஷ்பாபுவுடன் நடிப்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. தமிழ் படங்களை நான் ஒதுக்கவில்லை. நல்ல கதை, நம்பிக்கையான இயக்குநர்களுக்காக காத்திருக்கிறேன்," என்றார்.
English summary
Actress Tamanna says that she is waiting for good script in Tamil and also not bothering the quantity of films.
User Comments
Thagappan Yappaa 11 Feb 2012 01:25 pm
கார்த்தி கொடுத்த அல்வா காரணமா?
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST