வனயுத்தம் படத்தில் வீரப்பனாக நடித்தது சவாலாக இருந்தது என்று நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் கன்னட படம் அட்டஹாசா. இது தமிழ் மற்றும் தெலுங்கு, ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இன்று ரிலீஸானது.
வனயுத்தம் படத்திற்கு வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த படம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி இன்று ரிலீஸானது. கர்நாடகத்தில் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இன்று ரிலீஸானது.
இந்நிலையில் ஒன்இந்தியாவுக்கு கிஷோர் பேட்டி அளித்துள்ளார்.
வனயுத்தம் படத்தில் உங்களுக்கு வீரப்பன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது பற்றி...
இந்த படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும் நிஜ சம்பவங்கள் நடந்த இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். வீரப்பன் போன்று நடக்க, பேச பயிற்சி எடுத்தேன்.































