twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷால் - லட்சுமி மேனன் முத்தக் காட்சி.. எதுக்கு இந்த 'பொங்கல்'!

    By Shankar
    |

    லட்சுமி மேனன் - விஷால் உதட்டோடு உதடு பதித்த முத்தக்காட்சிதான் கோடம்பாக்கத்தின் சூடான சமாச்சாரமாகிவிட்டது இந்த ஒரு வாரமாக.

    இந்த முத்தக் காட்சியால் சென்சார்காரர்கள் வேறு யுஏ சான்று தந்துவிட, ரிவைசிங் கமிட்டிக்குப் போயிருக்கிறது படம்.

    சினிமாக்காரர்களும் சினிமா பத்திரிகையாளர்களும் அடுத்து எழுப்பிய கேள்வி, 'அப்ப படம் வராதா?'

    எதுக்கு தொல்லை என்று ஒரு பிரஸ் மீட் வைத்து விளக்கிவிடலாம் என நேற்று அழைத்திருந்தார் விஷால்.

    நிகழ்ச்சிக்கு உதட்டு முத்தத்தில் சம பங்குதாரரான லட்சுமி மேனனும் கலந்து கொண்டார்.

    முத்தக் காட்சிக்கு அறிமுகம்

    முத்தக் காட்சிக்கு அறிமுகம்

    தங்களின் முத்தக்காட்சிக்கு இப்படி அறிமுகம் தந்தார் விஷால்: "இப்படத்தில் நானும் லட்சுமிமேனனும் இடம்பெறும் முத்தக்காட்சி, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இடம்பெறும் முத்தக்காட்சிப் போன்று கிடையாது. இது பரபரப்பாக பேசக்கூடிய அளவுக்கு பெரிய விஷயமும் இல்லை. படத்தில் ஒரு செகண்ட் மட்டுமே வரக்கூடிய காட்சி. அதுவும் இக்காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. கதைக்கு தேவைப்பட்ட காரணத்தாலேயே இக்காட்சி வைக்கப்பட்டது...," என்றார்.

    நீங்கதான் கேட்டீங்களா?

    நீங்கதான் கேட்டீங்களா?

    கேள்வி: இல்ல நீங்கதான் இப்படி ஒரு லிப் டு லிப் வைக்கணும்னு இயக்குநர் சொல்றாரே?

    விஷால்: 'அப்படியா... சொல்லிட்டாரா... படம் பாருங்க.. அப்பதான் இந்தக் காட்சிக்கான அவசியம் உங்களுக்குப் புரியும்.'

    சென்சார்

    சென்சார்

    கேள்வி: படத்துக்கு யு ஏ சான்று தந்திருக்கிறார்களா?

    விஷால்: தெரியலை.. நாளைக்குத்தான் 10 பேர் கொண்ட ரிவைஸிங் கமிட்டி படத்தைப் பார்க்கிறாங்க.. நாங்க யு சர்டிபிகேட்டுதான் எதிர்பார்க்கிறோம்.. அவங்க என்ன தரப் போறாங்கன்னு தெரியல. யு சான்று பெறுவதற்கான முழு தகுதியிருக்கு எங்க படத்துக்கு இருக்கு..."

    இதான் பிரச்சினையா?

    இதான் பிரச்சினையா?

    கேள்வி: இந்த முத்தக்காட்சியாலதான் பிரச்சினையா?

    விஷால்: இது ஒரு பிரச்சினையே இல்லைங்க... சில நொடிகள் வந்து போகும் காட்சி.

    அது ஏன் லட்சுமிக்கு மட்டும்?

    அது ஏன் லட்சுமிக்கு மட்டும்?

    கேள்வி: இதுவரைக்கும் எத்தனையோ பேர் கூட நடிச்சிருக்கீங்க. அது ஏன் லட்சுமி மேனனுக்கு மட்டும் லிப் கிஸ் குடுத்தீங்க?

    விஷால்: ஏங்க.. கதைக்குத் தேவை என்பதாலதான் வெச்சோம். அதுக்கு மேல ஒண்ணுமில்லீங்க..

    பள்ளிக்கூட பொண்ணாச்சே?

    பள்ளிக்கூட பொண்ணாச்சே?

    கேள்வி: லட்சுமி மேனன் பள்ளிக்கூடத்தில் படிக்கிற பொண்ணுன்னு சொல்றீங்க... பதினோராம் வகுப்பு படிக்கிற பொண்ணுக்கு லிப் கிஸ் குடுக்கிறது கலாச்சார சீர்கேடு இல்லையா?

    விஷால்: நிஜமாகவே எனக்கு அதெல்லாம் தெரியல. இந்தப் படத்துல அவங்க ஒரு நடிகை. காட்சிக்குத் தேவையாக இருந்ததால் அதை வைத்தோம்.. அவ்வளவுதான்.

    வேண்டாத கேள்வி?

    வேண்டாத கேள்வி?

    தனஞ்செயன்: இந்தப் படத்துல லட்சுமி கல்லூரியில் படிக்கும் ஒரு பெண் பாத்திரத்தில் வராங்க. அதை மட்டும் பாருங்க. இப்படியெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் அப்புறம் பள்ளிக்குப் போகும் வயதில் பெண்களை நடிக்க வைப்பதே தப்புன்னு போகும்... இது வேண்டாத கேள்வி. இது ஒரு சினிமா.. அவ்வளவுதான்.

    பொங்கிட்டாங்களே...

    பொங்கிட்டாங்களே...

    -எத்தனையோ சினிமாக்களில் 9-ம் வகுப்பு பெண் என்று கூறி நடிக்க வந்த நாயகிகளைப் பார்த்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். அவர்கள் ஹீரோக்களுடன் காதல் காட்சிகளிலும் மகா நெருக்கமாக, முத்த மழை பொழிந்து நடித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் பொங்காத பொங்கல், லட்சுமியும் விஷாலும் முத்தமிட்டதற்கு பொங்கியிருப்பது... ஸ்ட்ரேஞ்ச்!

    English summary
    Cinema journos cornered Vishal during the press meet of Naan Sigappu Manithan press meet over his lip lock with Lakshmi Menon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X