40 நிமிடத்தில் ஆடியோ ரிலீஸ்!

திங்கள்கிழமை, செப்டம்பர் 8, 2008, 10:12 [IST]
தமிழ் திரையுலகில் இத்தனை விரைவாக ஒரு நிகழ்ச்சியை இதற்கு முன் எப்போதும் நடத்தி முடித்ததாக நினைவில்லை. அதுவும் சத்யம் திரையரங்கில்.

மினிமம் கேரண்டி புகழ் வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜூன் நடிக்க, தேனப்பன் தயாரிப்பில் உருவாகும் படம் துரை. இந்தப் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடி வட்டாரம் புகழ் கீரத். இந்தப் படத்தில் கவர்ச்சியில் கலக்கியெடுத்திருக்கிறாராம்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வெறும் 40 நிமிடங்களில் நடந்து முடிந்தது.

விழா ஏற்பாட்டாளர்கள் தொடங்கி நிகழ்ச்சிக்கு வந்த விஐபிக்கள் வரை எல்லாருக்கும் மிக்க மகிழ்ச்சி, நிகழ்ச்சி சீக்கிரம் முடிந்ததில் (ஞாயிற்றுக் கிழமையாச்சே).

அறிவித்தபடி சரியாக 10.30-க்குத் தொடங்கியது விழா. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், படத்தின் நாயகன் அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகிய நால்வர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பேசினர்.

சரியாக அடுத்த 40 நிமிடங்களில் ஆடியோவை வெளியிட்டுவிட்டனர்.

படமும் இப்படி விறுவிறு சுறுசுறுன்னு இருக்குமா வெங்கடேஷ்?
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST