twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்யராஜின் முருங்கைக்காய் ஊசியோட பாதிப்பு குறையலை மன்சூர் அலிகான்

    By Mayura Akilan
    |

    நடிகர் பாக்யராஜ் தமிழ்நாட்டு மக்களுக்கு போட்ட முருங்கைக்காய் ஊசியோட தாக்கம் இன்னும் குறையலை, மறுபடியும் கையில் ஊசியோட விஞ்ஞானியாக நடிக்கிறார் என்று நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.

    ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகியுள்ளபடம் '3 ஜி' எனப்படும் 'கௌதம் கனி கிரேஸ்'.இது வழக்கமான காதல் மசாலா சினிமாக் கதை அல்ல. இது அறிவியல் சார்ந்த படம். அதாவது சயின்ஸ் பிக்ஷன். இளம் விஞ்ஞானிகளான 3 அதி புத்திசாலி சிறுவர்களை மையமாக்கி உருவாக்கப் பட்டுள்ளது.

    இதில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான், சசிதரன், சங்கீதா, கவிதா, மாஸ்டர் மித்ரன், மாஸ்டர் சுகுமாரன், பேபி கிருபாஸ்ரீ ஆகியோருடன் நம்ம ஊர் கே. பாக்யராஜ் முக்கியமான விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்துள்ளார். பி.கே.ராஜ் இயக்கியுள்ளார். இசை ஆதிஷ் உத்ரியன், பாடல்கள் குகை.மா.புகழேந்தி

    பாடல் வெளியீட்டு விழா

    பாடல் வெளியீட்டு விழா

    3 ஜீனியஸஸ் எனப்படும் '3ஜி' 'கௌதம் கனி கிரேஸ்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது.

    மலேசியா நாட்டுக்காரன்

    மலேசியா நாட்டுக்காரன்

    பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசம் போது தன் மலேசிய அனுபவத்தைக் கூறினார்"நான் இந்தப் படத்தில் நடிக்கப் போகும் போது ஒரு நடிகராகப் போனேன். வரும் போது ஒரு உறவினராக திரும்பி வந்தேன்.

    இந்த முழுப்படமும் மலேசியாவிலேயே எடுத்தார்கள்.அங்கே போனபிறகு நான் சொந்தக் காரனைப் போல ஆகிவிட்டேன்.

    பொறாமைப்பட்ட பாக்யராஜ்

    பொறாமைப்பட்ட பாக்யராஜ்

    தயாரிப்பாளரிடம் வேலை பார்ப்பவர்களும் முதலாளி போலவே பொறுப்பாக இருந்தார்கள். அவர்களிடம் முதலாளி

    தொழிலாளி பேதமில்லை.அவர் ஒரு தயாரிப்பாளர் நான் நடிகர் என்கிற உணர்வே இல்லாமல் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைத்து அன்பும் பாசமும் காட்டினார்கள். அப்படி உபசரித்துக் கவனித்துக் கொண்டார்கள்.

    நான் மலேசியா நாட்டைப் பார்த்து மூன்று விஷயங்களில் பொறாமைப் பட்டேன்.

    'ஒன் மலேசியா' என்பதான் அவர்களது தாரக மந்திரம். அங்கே எல்லாரும் மலேசியன் என்கிற ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். நம் தமிழர்களும் அவர்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

    விடிய விடிய சாப்பிடுறாங்க

    விடிய விடிய சாப்பிடுறாங்க

    இன்னொரு விஷயம் அங்கு நள்ளிரவு 3 மணிக்குப் போனாலும் கடைகள் திறந்திருக்கின்றன. சாப்பாடு ஓட்டல்கள் திறந்திருக்கும். அங்கும் ஒரு கூட்டம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். எந்த உணவுக்கும் பஞ்சமில்லை.என்னய்யா ஊரு இது விடிய விடிய சாப்பிடறாங்க என்று ஆச்சரியப் பட்டேன்.

    நல்ல மழை பெய்கிறது

    நல்ல மழை பெய்கிறது

    மூன்றாவது விஷயம் அங்கு மூணுநாளைக்கு ஒரு முறை நாலு நாளைக்கு ஒரு முறை மழை பெய்கிறது. எனக்கு பொறாமையாக இருந்தது. இது மாதிரி நம் நாட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு எவ்வளவு

    படம் வெற்றிபெற வேண்டும்

    படம் வெற்றிபெற வேண்டும்

    போராட்டம் வேலை நிறுத்தம் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது! அவர்கள் நாட்டை நினைத்தேன் பொறாமையாக இருந்தது. இதுமாதிரி படங்கள் வெற்றி பெற்றால் மேலும் படங்கள் வரும். இரு நாட்டு உறவும் வலுப்படும்" இவ்வாறு பேசினார்.

    மன்சூர்அலிகான் கலகலப்பு

    மன்சூர்அலிகான் கலகலப்பு

    நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது "இந்தப் படம் நல்ல முயற்சி. மலேசியாவைக் கண்ணாடி போல காட்டியுள்ளார்கள். பார்க்க அருமையாக வந்துள்ளது. இளம் விஞ்ஞானிகள் பற்றிய கதை. இதில் பாக்யராஜ் அவர்கள் விஞ்ஞானியாக வருகிறார்.

    முருங்கைக்காய் ஊசி

    முருங்கைக்காய் ஊசி

    பாக்கியராஜ் கையில் ஊசியுடன் தோன்றுகிறார். அவர் ஊசி போடுவதில் பெரிய கில்லாடி. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஊசி போட்டார். அதோட தாக்கம் இன்றைக்கும் இருக்கிறது. போட்டது. முருங்கைக்காய் என்கிற ஊசி. அதற்கு முன்னாடி எல்லாம் முருங்கைக் காயை எவனும் சீந்த மாட்டான். கண்டுக்கவே மாட்டான். ஆனால் அவர் போட்ட போடுல உலகம் முழுக்க முருங்கைக்காய் கலக்கியது.

    வெற்றி பெற வாழ்த்து

    வெற்றி பெற வாழ்த்து

    எங்க ஊர் பக்கத்திலிருந் தெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான பாக்யராஜ் இப்படத்தில் நடித்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்." என்று கலகலப்பூட்டினார்.

    கலைநிகழ்ச்சிகள்

    கலைநிகழ்ச்சிகள்

    நிகழ்ச்சியின் தொடக்கமாக மலேசியாவில் நடனப் பள்ளி நடத்திவரும் குருஸ்ரீ .ஆர். சந்திரமோகனின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.இது அனைவரையும் கவர்ந்தது.

    இளம் விஞ்ஞானிகள்

    இளம் விஞ்ஞானிகள்

    2011ல் இளம் விஞ்ஞானிகள் விருது பெற்ற லேடி வெலிங்டன் பள்ளி மாணவிகள் கௌசியா, பவானி இருவரும் சிடி வெளியீட்டு விழாவில் சிடியைப் பெற்றுக் கொண்டனர். பரிசளித்தும் பாராட்டப் பட்டனர்.

    மலேசிய தமிழ்தாய் வாழ்த்து

    மலேசிய தமிழ்தாய் வாழ்த்து

    விழாவில் மலேசிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.புதுமை. இயக்குநர்கள் ஆர். அரவிந்தராஜ், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, வி.சி குகநாதன், தயாரிப்பாளர் கில்டு தலைவர் ஹேம்நாக்பாபு , தயாரிப்பாளர்கள்ஜே.வி. ருக்மாங்கதன், விஜயமுரளி,

    சிறப்பு விருந்தினர்கள்

    சிறப்பு விருந்தினர்கள்

    'செல்லினம்'முத்து நெடுமாறன், புண்ணிய மூர்த்தி, எடிட்டர் டி.எஸ்.ஆர் சுபாஷ், ஆதிஷ் உத்ரியன், பாடலாசிரியர் குகை.மா.புகழேந்தி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

    மலேசியா 'மின்னல்' மண்பலை பொன். கோகிலம் தொகுத்து வழங்கினார். தயாரிப்பாளர். சிவாஜி நன்றி கூறினார்.

    நானோ தொழில்நுட்பம்

    நானோ தொழில்நுட்பம்

    மக்களின் விழிப்புணர்ச்சிக்கு விஞ்ஞானம் ஒரு மகத்தான பங்கு வகிக்கிறது. அணு சக்தியால் ஏற்படும் நன்மைகள் நானோ தொழில் நுட்பம் போன்ற அறிவியல் விழிப்புணர்வை வலியுறுத்தி உருவாக்கப்பட்டது இந்தப்படம். அதிபுத்திசாலிகளாகப்

    பாக்யராஜ் விஞ்ஞானி

    பாக்யராஜ் விஞ்ஞானி

    பிறக்கும் 3 குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை இப்படத்தின் கரு.இப்படத்தில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான்,அகோதரன், சங்கீதா ,கவிதா, ஜஸ்பீர், ஆனந்த்ராஜ், மாஸ்டர் மித்திரன், மாஸ்டர் சுகுமாரன், பேபி கிருபா ஸ்ரீ ஆகியோருடன் இயக்குனர்- நடிகர் கே.பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரமான விஞ்ஞானி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

    நான்கு வில்லன்கள்

    நான்கு வில்லன்கள்

    இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு நான்கு நாடுகளில் இருந்து நான்கு பேர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தானிலிருந்து யாசின், சிங்கப்பூரிலிருந்து ஆனந்த்ராஜ், நைஜீரியாவிலிருந்து கிரிஷ், அரேபியாவிலிருந்து அலிபாய் ஆகியோர் தான் அந்த நான்கு வில்லன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    5 பாடல்கள்

    5 பாடல்கள்

    இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் இசையில் இந்தப் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களும் மலேசியா மற்றும் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளன. பாடல்களனைத்தையும் கவிஞர் மா புகழேந்தி எழுதியுள்ளார்.

    ஆய்வுக்கூட செட்

    ஆய்வுக்கூட செட்

    இப்படத்திற்காக மிகுந்த பொருட்செலவில் விஞ்ஞான ஆய்வுக்கூட செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் P.K.ராஜ். அதி நவீன தொழில்நுட்பத்துடன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் மகேஷ் K தேவ்.

    English summary
    Goudam Ghani Grace Movie Audio Launch held on 18th Jan 2014 at RKV Film Studio in Vadapalani.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X