Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரே தயாரிப்பாளரின் மூன்று படங்களுக்கு இன்று ஆடியோ ரிலீஸ்!
சென்னை: ஜேஎஸ்கே பிலிம்ஸ் ஜே சதீஷ்குமாரின் மூன்று படங்களுக்கு இன்று ஒரேநாளில் இசை வெளியீட்டு விழா நடக்கிறது.
தமிழ் சினிமாவில் சமீப நாட்களில் இப்படி ஆடியோ வெளியீடு நடத்தப்பட்டதில்லை.
ஜே எஸ் சதீஷ்குமார்
ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், சிவப்பு எனக்குப் பிடிக்கும் மற்றும் ஆள் என்ற மூன்று படங்களை வாங்கி வெளியிடுகிறார் ஜே சதீஷ்குமார். இந்த மூன்று படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் வேறாக இருந்தாலும், மொத்தமாக வாங்கிவிட்டதால் சதீஷ்குமார்தான் உண்மையான தயாரிப்பாளர்.
ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்
இவற்றின் இசை வெளியீடு இன்று ஒரே நாளில் நடக்கிறது. ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் சிம்பு தேவன் படம். அருள்நிதி-பிந்து மாதவி நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் என்பவர் இசையில் ஒரு பாடல் மட்டும் இன்று ரிலீசாகிறது.
சிவப்பு எனக்குப் பிடிக்கும்
யுரேகா இயக்கத்தில் மகேஷ்வரன் இசையில் உருவாகும் படம் சிவப்பு எனக்குப் பிடிக்கும். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் இசையும் இன்றுதான் வெளியாகிறது.
ஆள்
விதார்த் நடிக்கும் ஆள் படத்தை ஆனந்த் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜோஹன் இசையில் உருவாகியுள்ள இந்தப் பட இசையும் இன்று வெளியாகிறது. ஆனால் மூன்று இசை வெளியீடுகளுமே ஒரு தனியார் பண்பலை வானொலியின் ஸ்டுடியோவில் நடக்கிறது.