twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஞான் ஒரு மலையாளி, தமிழ் வராது.. ஆனா தமிழ்ப் படத்துக்கு வசனம் எழுதியிருக்கேன்!'

    By Shankar
    |

    சூறையாடல் படத்தின் இசை வெளியீட்டுக்கு வந்த பெரும்பாலான நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் போன்றோர், தங்களை ஒரு மலையாளி என்று அறிமுகம் செய்து கொண்டதோடு, தமிழில் பேச வராது என்று கூறி, ஆங்கிலத்தில் பேசி ஷாக் கொடுத்தனர்.

    அதைவிட முக்கியம் படத்தின் வசனகர்த்தா, தான் ஒரு மலையாளி, தமிழ் வராது என்று கூறியதுதான். இவரது மலையாள வசனங்களை வேறு ஒருவர் தமிழ்ப் படுத்தினார் என்ற உண்மையையும் பகிரங்கப்படுத்தினார்.

    இது பற்றிய விவரம் வருமாறு:

    ஐவி சசி

    ஐவி சசி

    அடுத்து ஐ.வி.சசி. தன் உதவி இயக்குநரின் திறமையைக் குறிப்பிட்டு ஆசி கூறி வாழ்த்தினார்.

    தயாரிப்பாளர் சங்க விஜயமுரளி பேசிய போது ''கடந்த 3ஆண்டுகளில் சென்சார் முடிந்து 275 படங்கள் வெளியாகாமல் உள்ளன. இப்படத்தின் பாடல்கள்,காட்சிகள் நன்றாக உள்ளன. நிச்சயம் வெற்றி பெறும்.''என்றார்

    ஹீரோ ஸ்ரீபாலாஜி

    ஹீரோ ஸ்ரீபாலாஜி

    கதாநாயகன் ஸ்ரீபாலாஜி பேசும்போது ''படத்தில் என் கேரக்டர் ஒரு மாதிரியான குழப்பமான மனநிலையில் இருப்பவன். படப்பிடிப்பில் இயக்குநர் நான் சிரித்தால்கூட அடிப்பேன் உதைப்பேன் என்று மிரட்டினார். அந்த அளவுக்கு மூடு மாறாமல் வைத்திருந்தார். என்னை இயக்குநர் படம் முடியும் வரை அந்த அளவுக்கு சீரியசாக மாற்றியிருந்தார்,'' என்றார்.

    மிதுனேஷ்வர்

    மிதுனேஷ்வர்

    இசையமைப்பாளர் மிதுனேஷ்வர், ''இதில் 5 பாடல்கள். பின்னணி இசையும் நன்றாக இருக்கும்,'' என்றார். ஒரு பாடலை பாடியும் காட்டினார்.

    ஒளிப்பதிவாளர் அகிலேஷ், ''இயக்குநர் நன்றாகத் திட்டமிடுபவர். ஒரே ஷெட்யூலில் நிற்காமல் படப்பிடிப்பு செய்து படத்தை முடித்து விட்டுத்தான் திரும்பினோம்.'' எனப் பாராட்டினார்.

    எழுத்தாளர் தினேஷ் பல்லத் ''இது என் திரைக்கதை வசனத்தில் உருவானது. மலையாளத்தில் நானே எழுதி அதை சரியான தமிழில் மொழி பெயர்க்க ஒருவரை உதவிக்கு வைத்துக் கொண்டு எழுதினேன்..''என்றார்.

    காயத்ரி

    காயத்ரி

    நடிகை காயத்ரி, "கேரள நாட்டிளம் பெண்களுடனே'என் முதல் படம். இது எனக்கு 2வது படம். இதில் கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். ஆடிசனில் என் தோற்றத்தைப் பார்த்து என் கேரக்டரை உருவாக்கியதாகச் சொன்னார்கள். இதில் எனக்கு ஆச்சரியம். பெருமை.''

    லீமா

    லீமா

    நடிகை லீமாவோ,''நான் தேர்வு ஆனதில் மகிழ்ச்சி. நான் அதிர்ஷ்டசாலி. இயக்குநர் தான் நினைத்தது வரும்வரை மீண்டும் மீண்டும் எடுப்பார். சளைக்கவே மாட்டார். காயத்ரியின் கண்ணசைவைப் பார்த்து நடிப்பைக் கற்றுக் கொண்டேன்''என்றார்.

    சூர்யகிரண்

    சூர்யகிரண்

    மாஸ்டர் சுரேஷாக இருந்து இயக்குநர் ஆன சூரியகிரண், "நான் சுஜிதாவின் அண்ணன். குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் சுரேஷாக 'மௌனகீதங்களி'ல் கண்ணாடி போட்ட சிறுவனாக நடித்தவன். இப்போது இயக்குநராகி விட்டேன். தெலுங்கில் ஒரு படம் ஹிட் கொடுத்தேன். அடுத்தபடம் ப்ளாப். அதன்பிறகு ஹிட். பிறகு தயாரிப்பாளர் ஆனேன். 6 கோடி இழப்பு. இப்படி ஏற்ற இறக்கம் நிறைய உண்டு. என் உதவியாளர்கள் நிறைய பேர் இன்று இயக்கி வருகிறார்கள்.''என்று கூறி படக்குழுவை வாழ்த்தினார்.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது ''ஹீரோ ஸ்ரீபாலாஜி என்னோட தம்பி மாதிரி. அவன் ஜெயிப்பதற்காக பல வருடங்களாக சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறான். கூத்துப்பட்டறைக்கு சென்று நடிப்பெல்லாம் கற்றுக்கொண்டு வந்தான். அவனை இந்தப் படத்தில் ஹீரோவாகப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது. இந்த புதிய படக்குழுவினரை வாழ்த்துகிறேன்'', என்றார்.

    குசேலன் தயாரிப்பாளர்

    குசேலன் தயாரிப்பாளர்

    ஆடியோவை 'குசேலன்' படத்தயாரிப்பாளர் 'செவன் ஆர்ட்ஸ்' விஜயகுமார் வெளியிட நடிகர் விஜயசேதுபதி பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் நடிகை தேவிஅஜித், நடிகர் நாஞ்சில் விஜயன், .ஆர்.ஓ.சங்கச்செயலாளர் பெரு. துளசி பழனிவேல், கவிஞர் நாகமானசி, இயக்குநர் தாமரை கண்ணன் ஆகியோரும் பேசினார்கள்

    நான் ஒரு மலையாளி

    நான் ஒரு மலையாளி

    நிகழ்ச்சியில் பேசிய பலரும் தான் ஒரு மலையாளி என்றும் முதல் தமிழ்ப்படத்தில் பங்கேற்கிறேன் தனக்குத் தமிழ் சரளமாக பேச வராது மன்னிக்கவும் என்றும் வெளிப்படையாகக் கூறியது அவர்களது மொழிப்பற்றை மட்டுமல்ல நேர்மையையும் காட்டியது. அதே பற்று நமக்கும் வேண்டும் என்று பிஆர்ஓ யூனியன் பெரு துளசி பழனிவேல் கடைசியில் பஞ்ச் வைத்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A dialogue writer told openly that without any Tamil knowledge he has written dialogues for a Tamil film Sooraiyadal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X