twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சன்டேயானா' போதும், டிவிட்டரில் அஜீத்-விஜய் ரசிகர்கள் சண்டை தாங்க முடியலையே...

    By Veera Kumar
    |

    சென்னை: ஞாயிற்றுக்கிழமையாகிவிட்டாலே இந்த அஜீத்-விஜய் ரசிகர்கள் அக்கப்போர் டிவிட்டரில் தாண்டவமாட தொடங்கிவிடுகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில், சினிமா விருது வழங்கும் விழாவின் இரண்டாம் பாகம் காண்பிக்கப்பட்டது. அதற்கு போட்டியாக சன் டி.வி.யில் அஜீத் நடித்த புத்தம்புதிய திரைப்படமான 'வீரம்' காண்பிக்கப்பட்டது.

    விஜய் விருதுகள் நிகழ்ச்சியில், தலைவா படத்திற்காக, நடிகர் விஜய்க்கு ஃபேவரைட் ஹீரோ விருது வழங்கப்பட்டது. இதை அறிந்துகொண்ட அஜீத் ரசிகர்கள், சன் டிவியில் வீரம் படம் பார்க்க வாருங்கள் என்று கூறி, பொதுவான ரசிகர்களை இழுக்க தொடங்கினர்.

    விஜய் டிவிக்கு செக் வைத்த வீரம்..

    விஜய் டிவிக்கு செக் வைத்த வீரம்..

    இதற்காக #VEERAM_TheCheckMateFromSunTv என்ற ஹேஸ்டேக் உருவாக்கினர். ட்விட்டரில் இது டிரெண்டாகவும் ஓடியது. அஜீத் ரசிகர்கள் இந்த ஹேஸ்டேக்கில் கருத்துக்களை தட்டிவிட்டுக்கொண்டிருந்தனர். இதற்கு போட்டியாக #VIJAYFavHeroForever என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கிய விஜய் ரசிகர்கள், தங்கள் ஹீரோவுக்கு ஆதரவாக கருத்து யுத்தம் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இந்த ஹேஸ்டேக், திங்கள்கிழமை மதியம் வரை அகில இந்திய டிரெண்டாக டிவிட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.

    அடுத்த வாரமும் அக்கப்போர்

    அடுத்த வாரமும் அக்கப்போர்

    இத்தோடு விடுவார்கள் என்று பார்த்தால் இரு ரசிகர்களும் மறப்பதாக இல்லை. நேற்று மீண்டும் அஜீத், விஜய் ரசிகர்கள் புதிய ஹேஸ்டேக்குடன் களமிறங்கினர். விஜய் ரசிகர்கள் #VIJAY_DarlingofMasses என் ஹேஸ்டேக்கையும், அஜீத் ரசிகர்கள் #22YearsOfSelfMadePhenomAJITH என்ற ஹேஸ்டேக்கையும் உருவாக்கினர்.

    தானா வளர்ந்த காட்டு மரம்

    தானா வளர்ந்த காட்டு மரம்

    22 வருடங்களாக சுயமாக தன்னை செதுக்கி வளர்ந்தவர் அஜீத் என்பது அவரது ரசிகர்கள் வாதம். விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பது அவரது ரசிகர்களின் கருத்து. விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திரைப்படத் துறையில் முன்னணியில் இருந்தபோது விஜய்க்கு வாய்ப்பு பெற்றுத்தந்ததையும், ஆனால் பின்புலம் எதுவுமே இல்லாமல் அஜீத் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவர்ந்ததையும் அஜீத் ரசிகர்கள் தங்களது ஹேஸ்டேக்கில் வெளிப்படுத்தினர்.

    மாஸ் ஹீரோ

    மாஸ் ஹீரோ

    ரசிகர்மன்றங்களை அதிகம் கொண்டிருப்பது, போகுமிடங்களில் மக்கள் கூட்டம் கூடுவது உள்ளிட்டவற்றால் விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பதை அடிப்படையாக வைத்து விஜய் ரசிகர்கள் ஹேஸ்டேக் உருவாக்கியிருந்தனர். கடந்த வாரம் விஜய் ரசிகர்கள் அதிக அளவில் டிவிட் செய்திருந்த நிலையில், இம்முறை அஜீத் ரசிகர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இன்று மதியம்வரையில் அகில இந்திய டிரெண்டில் அஜீத் ரசிகர்களின் ஹேஸ்டேக் டிரெண்டாக இருந்தது. உதாரணத்துக்கு சில கீச்சர்களின் கருத்துக்களை பார்க்கலாம்.

    போக்கிரி பொங்கல்

    போக்கிரி பொங்கல்

    விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் வெளியான நேரத்தில், அஜீத்தின் ஆழ்வார் திரைப்படம் வெளியாகியது. இதில் கதை, திரைக்கதை மோசமாக இருந்த ஆழ்வார் தோல்வியடைந்தது. பிரபுதேவா இயக்கத்தில் விறுவிறு திரைக்கதையுடன் அமைந்த போக்கிரி ஹிட்டானது. இந்த டிவிட்டிலும் ஆழ்வார் பட தோல்வி குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.

    சொல்லியடித்த கில்லி

    சொல்லியடித்த கில்லி

    மசாலா ஹிட் இயக்குநர் தரணியிடமிருந்து வெளியான, கில்லி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அதில் விஜய், பிரகாஷ் ராஜ் போன்றோர் தோன்றும் காட்சிகள் கைதட்டலை அள்ளின. இதைத்தான் இந்த டிவிட்டில் சுட்டிக்காட்டுகிறார் அதன் கீச்சர்.

    சிங்களருக்கு தெரிந்த ஹீரோ

    சிங்களருக்கு தெரிந்த ஹீரோ

    இந்த டிவிட்டில் சிங்களர்களான தனது நண்பர்களுக்கு தெரிந்த ஒரே ஹீரோ விஜய்தான் என்று கீச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டிலும் தமிழ் ஹீரோ என்றால் அது விஜய்தான் என்று நினைப்பதாக அவர் கூறியுள்ளார்.

    கத்திக்கு பாதுகாப்பு

    கத்திக்கு பாதுகாப்பு

    தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட கட்டுரையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற திரைப்பட துறையினர் ஆர்ப்பாட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். கட்டுரை வெளியிட்டதற்காக ராஜபக்ஷே, ஜெயலலிதாவின் காலில் விழுந்து தாயே என்னை விட்டுவிடுங்கள், தெரியாமல் தப்பு செய்துவிட்டேன் என்று கெஞ்சுவது போன்ற கட்-அவுட்டுகளை அதிமுகவினர் வைத்துள்ளனர். அதேபோல ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்க கூட்டத்தில் விஜய் பங்கேற்றதாக கூறுகிறது இந்த கீச்சு.

    வந்தார், ஆள்கிறார்

    வந்தார், ஆள்கிறார்

    இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சினிமாவுக்குள் வந்த அஜீத் முதலில் தோல்வியுற்றாலும், வீழ்ச்சியடைந்தாலும், அவராகவே எழுந்தார். தற்போது சினிமாவை ஆட்சி செய்து கொண்டுள்ளார் என்று கூறுகிறது இந்த டிவிட். இதை ஐம்பதுக்கும் அதிகமானோர் ரீடிவிட் செய்துள்ளனர்.

    அன்புத் தொல்லை

    அன்புத் தொல்லை

    கடந்த வாரம் மட்டுமல்லாமல், இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை, அஜீத்-விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் வரிந்து கட்டியதை கவுண்டமணி பாணியில் கேலி செய்கிறார் இந்த கீச்சர். நடிகர்கள் தங்களுக்கு தாங்களே பிறந்தநாள் போஸ்டர் அடித்துக்கொள்ளுவதாக கூறி கவுண்டமணி ஒரு படத்தில் கிண்டல் செய்யும் வசனத்தை இந்த டிவிட் சுட்டிக்காண்பிக்கிறது. ரசிகர்கள் தங்களது வாழ்க்கையை வளப்படுத்த பாருங்கள் என்று நெத்திப்பொட்டில் அடித்து கூறுகிறது இந்த டிவிட்.

    English summary
    Tamil cinema heros Ajith and Vijay fans making their hastags in twitter trend after Vijay tv and Suntv telecast Both the heros events in repective channels in last week.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X