கோவாவில் உள்ள ஒரு மல்ட்பிளக்ஸ் வளாகத்தில் புகை பிடித்ததற்காக நடிகர் அஜய் தேவ்கனுக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜய் தேவ்கன் கடந்த மே மாதம் கோவா வந்திருந்தார். அங்குள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸில் நடந்த தனது கோல்மால்3 படத்தின் புரமோஷனல் காட்சிக்காக வந்திருந்தார். அப்போது தியேட்டர் வளாகத்தில் புகை பிடித்துள்ளார்.
இதை சிலர் படம் பிடித்து தேசிய புகை ஒழிப்புக் கழகத்திற்கு அனுப்பி வைத்தனர். மீடியாக்களிலும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து தேசிய புகை ஒழிப்புக் கழகம், கோவா மாநில சுகாதாரத் துறை இயக்குநர் ராஜ்நந்தா தேசாய்க்கு புகார் அனுப்பியது.
இன்று தேவ்கனுக்கு அபராத நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என காவல்துறை டிஎஸ்பி தியோ பெனாலிகர் கூறியுள்ளார்.
பொது இடத்தில் தம் அடித்து தேவ்கன் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஜனவரி மாதம் சண்டிகரில் இப்படித்தான் பொது இடத்தில் தம் அடித்து மாட்டிக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
நடிகர் அஜய் தேவ்கன் கடந்த மே மாதம் கோவா வந்திருந்தார். அங்குள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸில் நடந்த தனது கோல்மால்3 படத்தின் புரமோஷனல் காட்சிக்காக வந்திருந்தார். அப்போது தியேட்டர் வளாகத்தில் புகை பிடித்துள்ளார்.
இதை சிலர் படம் பிடித்து தேசிய புகை ஒழிப்புக் கழகத்திற்கு அனுப்பி வைத்தனர். மீடியாக்களிலும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து தேசிய புகை ஒழிப்புக் கழகம், கோவா மாநில சுகாதாரத் துறை இயக்குநர் ராஜ்நந்தா தேசாய்க்கு புகார் அனுப்பியது.
Read: In English
இதையடுத்து தேவ்கனுக்கு ரூ.100 அபராதம் விதித்து அவருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாநில குற்றப் பிரிவு போலீஸிலும் சுகாதாரத் துறை புகார் கொடுத்துள்ளது.இன்று தேவ்கனுக்கு அபராத நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என காவல்துறை டிஎஸ்பி தியோ பெனாலிகர் கூறியுள்ளார்.