நடிகையின் கணவர் மீது தாய்லாந்து அழகிகள் கண்ணீர் புகார்... போலீஸ் சமரசம்!

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 3, 2010, 11:56 [IST]
சென்னை: மசாஜ் கிளப்பில் வேலை என்று கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் தளளப்பார்க்கிறார் என பிரபல நடிகையின் கணவர் ரவீந்திரா மீது தாய்லாந்து நாட்டு அழகிகள் 15 பேர் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர்.

போலீஸ் சமரச ஏற்பாட்டின்பேரில், இரண்டுமாத சம்பளம் கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் நடிகையின் கணவர்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த அழகிகள் பஜோன், அருண்சிஜா, திம்னா, போஸ்ரி, தமாகோன், சுரையா ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கண்ணீருடன் வந்திருந்தனர்.

அவர்களுடன், வக்கீல்களும், மகளிர் அமைப்பை சேர்ந்த கல்யாணசுந்தரி, விஜயமேரி, சுமதி தட்சிணாமூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர். தாய்லாந்து அழகிகள் 6 பேரும் புகார் மனு ஒன்றை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தனர்.

அதில், மசாஜ் கிளப்பில் வேலை தருவதாக அழைத்து வந்துவிட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று நடிகை ஒருவரின் கணவர் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

"தாய்லாந்து நாட்டிலிருந்து எங்களை போல 15 இளம் பெண்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்தோம். பிரபல நடிகை ஒருவரின் கணவரும், அவரது நண்பர்கள் 2 பேரும், எங்களை அழைத்து வந்தார்கள். மசாஜ் கிளப்களில் வேலை தருவதாகவும், மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தருவதாகவும் எங்களிடத்தில் ஒப்பந்தம் போட்டார்கள்.

ஒரு வருடம் வேலை பார்க்க வேண்டும் என்றும், தங்கும் இடம் இலவசமாக தருவோம் என்றும், ஆனால் நாங்கள் விருப்பப்பட்ட உணவை சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் மசாஜ் செய்யும் கலையை கற்றுள்ளோம். எனவே, மசாஜ் மட்டும்தான் செய்வோம் என்றும், வேறு தவறான வழியில் எங்களை ஈடுபடுத்தக் கூடாது என்றும் சொல்லித்தான் வேலைக்கு வந்தோம்.

ஆனால் 2 மாதங்கள் மட்டும் ஒப்பந்தப்படி மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள். சென்னையில் தியாகராயநகர், வடபழனியில் உள்ள ஒரு ஓட்டல் ஆகிய இடங்களில் மசாஜ் கிளப்களில் நாங்கள் 6 பேரும் வேலை பார்க்கிறோம். மீதி உள்ள 9 பெண்களும் மதுரை, திருப்பூர், பெங்களூர் ஆகிய இடங்களில் மசாஜ் கிளப்களில் பணிபுரிகிறார்கள்.

கடந்த 8 மாதமாக எங்களுக்கு பேசியபடி மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தராமல், ரூ.15 ஆயிரம் மட்டுமே தருகிறார்கள். மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தரவேண்டுமென்றால் வாடிக்கையாளர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களை நிர்வாணமாக படுக்க வைத்து மசாஜ் செய்யச் சொல்லுகிறார்கள். எங்களையும் ஆபாசமாக உடை அணியச் சொல்லுகிறார்கள். ஒப்பந்தத்தை மீறி எங்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கிறார்கள்.

செக்ஸ் தொழிலாளியாக இருக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. இதனால் எங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம். எங்களது பாஸ்போர்ட்டையும், விசாவையும் பறித்து வைத்துக்கொண்டனர்.

சொந்த நாடான தாய்லாந்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று கேட்கிறார்கள். அவ்வாறு பணம் கொடுக்காவிட்டால் ஊருக்கு திரும்பி போக முடியாது என்றும், செக்ஸ் தொழில் செய்து எங்களுக்கும் சம்பாதித்து கொடுங்கள், நீங்களும் சம்பாதித்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை சொல்லுகிறார்கள். இல்லாவிட்டால் எங்களை கொலை செய்து, பிணத்தை கடலில் வீசிவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள்.

எங்களை கொத்தடிமை போல் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். அந்த அறை முழுவதும் கரப்பான் பூச்சிகளை விட்டு எங்களை சித்ரவதை செய்தனர். அவர்களுடைய கொடுமைகள் தாங்காமல் நாங்கள் தப்பி வந்து இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம்.

சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எங்களை சொந்த நாட்டுக்கு நல்லபடியாக திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எங்களைபோல் சித்ரவதையில் தவிக்கும் மேலும் 9 பெண்களையும் மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்..." என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.

இந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அசோக்நகர் உதவி கமிஷனர் பரந்தாமனுக்கு, கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் உத்தரவிட்டார்.

சமரசம்...

உடனடியாக சம்பந்தப்பட்ட நடிகையின் கணவர் ரவீந்திரா விசாரிக்கப்பட்டார். அவர், தாய்லாந்து அழகிகளை விபசாரத்தில் தள்ள முயற்சிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

புகார் கூறப்பட்டவர்கள் பெயர் ரவீந்திரா, இமானுவேல், ரமேஷ் என்று தெரியவந்ததாகவும், அவர்களில் ரவீந்திரா நடிகை யுவராணியின் கணவர் என்றும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒப்பந்தப்படி இன்னும் இரண்டு மாதங்கள் வேலை பார்க்க வேண்டியிருந்தாலும், வேலை பார்க்காமலேயே அவர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தையும் கொடுத்து, அனைவரையும் விமானத்தில் தாய்லாந்து நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைப்பதாகவும், புகார் கூறப்பட்டவர்கள் உறுதியளித்துள்ளனர். இதற்கு அந்த தாய்லாந்துப் பெண்களும் ஒப்புக் கொண்டதால் விவகாரம் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டதாக போலீஸ் அறிவித்தது.
User Comments
Truth 04 Dec 2010 03:19 pm
so their is no action taken against the culprits. May be the actress have wide touch with wide peoples, hence they do not want to play with this case and settled the case without punishments...nice judgement... judges should take notes of this cases
ராஜன் 04 Dec 2010 07:56 am
ஜெரிக்கொமாயி, அப்ப நீ உன் அக்கா கிட்ட இல்ல அம்மா கிட்ட மசாஜ் செய்ய வேண்டியது தானே !
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST