வாக்காளர்களை குற்றம் சாட்டி குஷ்பு பேச்சு-வக்கீல்கள் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, மே 15, 2011, 13:28 [IST]
Kushboo
திமுகவுக்கு இது தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் இதுதோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சாபம் விடுவது போல நடிகை குஷ்பு பேசியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குஷ்பு அடங்க வேண்டும் என்று விந்தியா காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அதிமுக வக்கீல்கள் பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதில், நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை.

தேர்தல் முடிவுகள் மக்களுக்கு தோல்வி என்று கூறி, 202 தொகுதி மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி, பேட்டி கொடுத்த, நடிப்பில் காலம் சென்ற நடிகை குஷ்புவை மிக வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
English summary
ADMK lawyers have condemned Actress Kushboo for her comments on TN voters and people. She had said that people have failed in the polls not DMK. People will be affected in ADMK rule. ADMK lawyers have pasted posters comdemning Kushboo in and around Madras HC campus.
User Comments
Indian Tamilan 16 May 2011 05:09 pm
அடியே குஷ்பு உன்னோட இந்த கருத்தை வன்மையா கண்டிக்கிறேன். முதல்ல உன்னோட லிஸ்ட்ட பாரு பிரபு,ஜெயராம்,கார்த்திக்...ஏறக் நார்த் இந்தியா நோ ஐடியா? யாரு வேண்டுமானாலும் கல்யாணத்துக்கு முன்னாடி யாருகூட வேண்டுமுனாலும் படுக்கலாம்னு சொன்னதுக்கு இப்ப அர்த்தம் புரியுது. இப்ப வந்து மக்களோட தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு ஏற்காமல் மக்கள்கிட்டே இது திமுக தோல்வி இல்லை மக்களோட தோல்வினு எவ்வளவு தெனாவெட்டு இருந்தா சொல்லிருப்ப. உன்னையெல்லாம் இன்னும் தமிழ்நாட்டுல விட்டு வைத்திருக்கதே ரொம்ப தப்பு வடிவேலோட போய் பம்மிக்க...
deleted 20 May 2011 12:48 pm
இவளுக்கெல்லாம் கோயில் கட்டின எப்பவிய உதகனும்.
ewrwer errwer 16 May 2011 02:33 pm
இவல இஸ்லாமிய சட்டப்படி தண்டிக்க வேண்டும்
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST