To check Oneindia Tamil on your Mobile
go to:   http://m.oneindia.in/tamil/

பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய சினிமா தயாரிப்பாளர்!!

சென்னை: சினிமா பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் சமீபத்தில் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை வைத்து, அத்தகைய புரோக்கர்கள் சிலரிடம் வாடிக்கையர் போல பேசி, பெண்களைக் கேட்டனர்.

மறுமுனையில் பேசிய நபர் தன்னிடம் துணை நடிகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு ரூ. 10 ஆயிரத்துடன் வந்தால் அழைத்து செல்வதாக கூறினார். இதையடுத்து வாடிக்கையாளர் போல் சென்ற பாலியல் தடுப்பு பிரிவு போலீசாரை தி.நகரில் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

அவர்களை பின் தொடர்ந்து சென்ற ஆய்வாளர் அந்த நிறுவனத்தில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக புகுந்து அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்த செல்வநாயகன் (54) மற்றும் அவரின் உதவியாளர் ஞானபிரகாசம் (64) ஆகியோரை கைது செய்தனர்.

அங்கிருந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் செல்வ நாயகன் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா தயாரிப்பதாகவும், சில படங்களுக்கு துணை இயக்குனராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது 'பேசாதே' என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குவதாகவும் கூறினார். இதே போல் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக சென்னை ஆழ்வார்திருநகரில் ஒரு அபார்ட்மெண்டில் 3 இளம்பெண்களை தங்க வைத்து பாலியல் தொழில் செய்து வந்த நாகேந்திரன் (50) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சினிமா மேக்கப்மேன் கண்ணதாசன் (30) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சென்னையைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சைதாப் பேட்டை 4-வது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
English summary
Chennai Police arrested 5 persons who are functioning as brokers for prostitution. According to police, all the five have involving in film business and now lodged in Puzhal jail.
ஜனவரி 6, 2012 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
    Upcoming Matches
Aus Vs Sl at Bellerive Oval Fri 24th Feb ODI
Ken Vs Ire Fri 24th Feb Int2020
Nz Vs Sa - 1st ODI at Westpac Stadium Sat 25th Feb ODI

வீடுகளை லாட்ஜாக மாற்றும் குடும்ப பெண்கள்: கலாச்சார சீரழிவை நோக்கி சென்னை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் பலரும் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதால் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.பணத்திற்கு ஆசை ஆடம்பர வாழ்க்கைசிக்கனமாக இருக்கச் சொல்லும் கணவரின் பேச்சைக் கேட்காமல், அக்கம் பக்கத்தவர்களைப் பார்த்து தாமும் அதைப்போல செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ்க்கையை பலி கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது. ஆடம்பர.....

பெண் கொலையில் இருவர் கைது – ஆன் லைன் விபச்சாரம் செய்தது அம்பலம்

சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் தொழில் அதிபர் மனைவியை கொலை செய்து, நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்ததும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சென்னை திருமுல்லைவாயல், வெங்கடாச்சலம் நகரைச் சேர்ந்தவர் லியாகத்அலி. தொழில் அதிபரான இவருக்கு சென்னை பாடியில் லேத் பட்டரை உள்ளது. இவரது மனைவி யாஸ்மின் கடந்த திங்கட்கிழமையன்று அவரது வீட்டிலேயே கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் அணிந்திருந்த நகைகளும் பீரோவினுள் இருந்த நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய்.....
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
Oneindia  Oneindia Login