எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும்-சுஹாசினி பேச்சு!

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 8, 2012, 11:11 [IST]
Suhasini
நடிகைகளை மட்டும் அழகழகானவர்களாக அறிமுகப்படுத்துகிறீர்களே அதேபோல எங்களைப் போன்ற பெண்களுக்காக அழகான ஹீரோககளையும் அறிமுகப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் முன்னாள் நாயகி சுஹாசினி.

சென்னையில் பனித்துளி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சுஹாசினி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சுஹாசினி பேசுகையில், தற்போது கருப்பு ஹீரோக்களையே அதிகம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டி வெள்ளைத் தோல் கொண்ட நாயகர்கள்தான் பெண்களுக்குத் தேவை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக அவர் பேசுகையில், நான் ஒரு நடிகையாகவோ, சினிமா சார்ந்தவராகவோ இல்லாமல் சாதாரண பெண் ரசிகை என்ற அளவில் ஒரு கோரிக்கையை இங்கே வைக்கிறேன்.

ஹீரோக்களில் எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி, அஜித் போன்ற ஹேண்ட்சம் ஹீரோக்களை தமிழ் ரசிகைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். நடிகைகளை மட்டும் அழகழகாக அறிமுகப்படுத்துகிறீர்களே, ரசிகைகளுக்கும் அழகான ஹீரோக்களை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன் என்றார்.

இதற்கு கருப்பு நிறம் கொண்ட நாயகனும், இயக்குநருமான சேரன் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில்,

சுஹாசினி பேசிய ஹேண்ட்சம் ஹீரோக்கள் எல்லோருமே வெள்ளை நிறமுடையவர்கள் என்பதால் அப்படி சொல்லி இருக்கிறார். கறுப்பாக இருப்பவர்களிலும் ஹேண்ட்சம் ஹீரோக்கள் இருக்கிறார்கள் மேடம். அவர்களையும் ரசியுங்கள் என்றார்.

சபாஷ் சரியான போட்டிதான்...
English summary
Actress Suhasini has said that women want colorful heroes like MGR, Kamal and Ajith. She was speaking in Panithuli audio release function yesterday. But director Cheran replied that there are many handsome heroes in black!.
User Comments
Kumar Udhaya 09 Jan 2012 05:07 pm
மணியோட கருத்த மணிய பாத்து பாத்து வெகுளியா மனம் திறந்து ஏக்கத்த சொல்லிப்புட்டா போறா விட்டுடுங்கோ...
Truth JustIN 09 Jan 2012 02:00 pm
அருக்காணிய நடித்த இந்த மாமி விடும் ஜொள் தாளவில்லை. தனுஷ், சிம்பு, ஆரியா மாதிரி ஆட்களும் வேண்டாம், அரவிந்த் சாமி, அப்பாஸ், அஜித் மாதிரியும் வேண்டாம், கதைக்கு தகுதார்போல இயல்பா அதே சமயத்தில் மாடர்னா நடிககூடிய நல்ல நடிகர்களை அறிமுகபடுதுங்க. காதல் கன்றாவி தவிர கதையே இல்லையா என்ன? புளுச்ச மாவு அதையே திரும்ப திரும்ப அரிதால் எப்படி? மொதல்ல கதைய மதுங்கபா.
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST