பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான ஆர்.என்.கே.பிரசாத் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
சிவகுமார் நடித்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கவிக்குயில், சிட்டுக் குருவி உள்பட 70-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் ஆர் என் கே பிரசாத்.
பின்னாளில் நடிகராகிவிட்டார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல் தந்தையாக பிரசாத் நடித்திருந்தார். நாயகன், வேடன், ராசய்யா, தம்பி பொண்டாட்டி, பதவி பிரமாணம் என பல படங்களில் நடித்துள்ளார்.
சித்தி, நெஞ்சின் அலைகள், மர்ம தேசம் போன்ற டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார்.
பிரசாத்துக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். பிரசாத் உடல் அடையாறு வெங்கட்ரத்னம் நகரில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. பிரசாத்துக்கு உஷா என்ற மனைவியும் ராஜீவ் பிரசாத் என்ற மகனும், மாலாராவ் என்ற மகளும் உள்ளனர்.