துப்பாக்கியில் விஜய்யுடன் ஜெயராம்!

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2012, 18:15 [IST]
Vijay and Jayaram
விஜய் நடிக்கும் புதிய படமான துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மலையாள நடிகர் ஜெயராம்.

மலையாளத்தில் முழுநேரமும், தமிழில் பகுதி நேரமாகவும் நடித்து வருபவர் ஜெயராம். கடைசியாக பொன்னர் சங்கர் படத்தில் பிரசாந்துடன் நடித்திருந்தார்.

இப்போது விஜய் நடிக்க, முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

"இந்தப் படத்தில் எனக்கு நல்ல வேடம் கொடுத்துள்ளனர். ஆனால் பெப்சி - தயாரிப்பாளர் மோதல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்," என்றார்.

இந்தப் படத்தில் அவருக்கு வில்லன் வேடம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "என்னைப் பார்த்தால் யாராவது வில்லன் என்று சொல்வார்களா... ஒரு நல்ல வேடம். அவ்வளவுதான்," என்கிறார் ஜெயராம்.
English summary
Jayaram, one of the leading Malayalam actors will be doing a small but significant role in director A R Murugadoss’ Vijay starrer Thuppakki.
User Comments
Vincent Mohammed 16 Feb 2012 12:20 am
எனக்கு வேற ஒரு நல்ல தமிழ் நியூஸ் வெப்சைட் கிடைசிடிச்சி, இனிமேல் நான் இந்த தட்ஸ்தமிழ் பார்க்கமாட்டேன் இங்கு கமென்ட் போடமாட்டேன் இது எடிட்டர் மாமியா ஜக்கம்மா மேல சத்தியம்
lurakoo 27 Feb 2012 11:38 am
ஜெயராம் நீரம் சரிஇல்லை, சனியன் சைக்கிள்ள வருது
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST