போன வாரம் ஆறு... இந்த வாரம் அஞ்சு!

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17, 2012, 11:34 [IST]
இந்த வெள்ளிக்கிழமையும் கோலிவுட் ரொம்ப பிஸி. காரணம் 5 புதிய படங்கள் திரையைத் தொடுகின்றன.

போனவாரம் 6 படங்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் ஒரு விதமான படம். இதில் தோணிக்கு நல்ல பெயர்.

இந்தவாரம் முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி?, உடும்பன், காட்டுப்புலி மற்றும் அம்புலி என 5 படங்கள்.

இவற்றில் முப்பொழுதும் உன் கற்பனைகள் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதர்வா-அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் ஒரு வித்தியாசமான த்ரில்லர் என்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்து இயக்கியுள்ளார்.

காதலில் சொதப்புவது எப்படி படம் தமிழ் - தெலுங்கில் வெளியாகிறது. நடிகர் சித்தார்த் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இதிலும் ஹீரோயின் அமலா பால்தான்.

சில நெருக்கடிகளைத் தாண்டி உடும்பன் படம் வெளியாகிறது. உடும்பை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அர்ஜூன் நடிப்பில் வரும் காட்டுப் புலியும் ஆக்ஷன் த்ரில்லர்தான். அம்புலி ஒரு 3 டி படம். மனோஜ் நைட் ஷியாமளனின் வில்லேஜ் மாதிரி.

இவற்றோடு, கவுதம் மேனனின் ஏக் தீவானா தா (விண்ணைத் தாண்டி வருவாயா)வும் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 11 அரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ்!

ஆங்கிலப்படம் தி வுமன் இன் பிளாக், ரவி தேஜாவின் தெலுங்குப் படம் நிப்பு போன்றவையும் இன்றுதான் ரிலீஸ்.
English summary
it is another busy Friday for Kollywood. Last week had half a dozen releases, while this Friday will have five releases. There are two romantic movies Muppozhudhum Un Karpanaigal and the bilingual Kadhalil Soddhapavadhu Eppadi (Love Failure in Telugu) which got the best of screens, two action entertainers Udumban and Kattupuli and a 3D supernatural thriller Ambuli.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST