புதுப் பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்!

வியாழக்கிழமை, பிப்ரவரி 16, 2012, 13:57 [IST]
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், பி ஆர் பந்துலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளியான பிரமாண்டமான புராண - வரலாற்றுப் படம் கர்ணன்.

பார்த்தவர் அத்தனைப் பேரையும் கட்டிப் போட்ட காவியப் படம் இது. சிவாஜி கணேசன், சாவித்ரி, தேவிகா, அசோகன் என ஜாம்பவான்கள் நடிப்பில் வந்த படம்.

பெற்ற தாய்க்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கே வரம் அளித்த பெருமைக்குரிய தர்மவான் கர்ணன். தர்மதேவனையும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட வைத்த கர்ணன் என்ற மகாபாரதப் பாத்திரம் உயிருடன் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்பதை கண்முன் நிறுத்தினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

அந்தப் படம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதுப் பொலிவுடன் வெளிவருகிறது.

இந்தப் படத்தை தயாரித்து இயக்கிய பி ஆர் பந்துலுவுக்கு இந்த நூறாவது ஆண்டு வருடம் என்பதால், அவரை கவுரவிக்கும் வகையில், படத்தை டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளனர், இதனை வெளியிடும் திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தினர்.

தொழில்நுட்ப ரீதியில் இன்றைக்குள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி இந்தப் படத்தை 5.1 ஒலியமைப்புடனும், மேம்படத்தப்பட்ட தரத்துடனும் வெளியிடுகிறார்கள். அதே நேரம் ஒரிஜினல்தன்மை மாறாதவாறும் பார்த்துக் கொண்டுள்ளனர்.

படத்தின் ட்ரெயிலரை வரும் பிப்ரவரி 21-ம் தேதி சத்யம் திரையரங்கில் வெளியிடுகின்றனர். பின்னர் ஒரு புதிய படத்தை எப்படி ரிலீஸ் பண்ணுவார்களோ அதே மாதிரி கர்ணனையும் உலகெங்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

English summary
Nadigar Thilagam Sivaji Ganesan's epic movie Karnan has digitalised recently. The trailer of this upgraded movie will be released on Feb 21 and the movie will be released like a new film soon.
User Comments
Chandru Krishna 16 Feb 2012 07:12 pm
மகாபாரதம் இந்தி டிவி தொடர் எல்லாரும் பார்த்திருப்போம்! இத்தனைக்கும் சினிமாவை விட ராமாயணம், மகாபாரத டிவி தொடர் சிறப்பாகவே அமைந்து இருக்கும்! அதில் கர்ணன் பாத்திரத்தை பார்த்தவுடன் அன்று மகாபாரத தொடர் பார்பதையே நிறுத்திட்டேன்! காரணம்? கர்ணன் ஒரு கற்பனை பாத்திரமாகவே இருக்கலாம் ஆனால் அது இப்படிதான் இருந்திருக்க வேண்டும் அல்லது இப்படி இருந்தால்தான் கர்ணனை ஏற்று கொள்ள முடியும் என்று கர்ணனை நம் கண் முன் வெள்ளி திரையில் நிறுத்தியவர் நடிகர் திலகம்! மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்! - MGR ரசிகன்
k p sivanath babu 16 Feb 2012 05:46 pm
This is a great news and we are eagerly waiting to see this historic movie of my beloved sivaji and i hope it will be released in delhi also, since i am living in newdelhi.
Chandru Krishna 16 Feb 2012 03:11 pm
MGR IS UNIQUE LIKE MOON IN THE SKY ! EVERGREEN HERO IN CINE FIELD POLITICS AND REAL LIFE ! EAST OR WEST, MGR IS BEST !
sevvanam 16 Feb 2012 03:41 pm
சிவாஜி அவர்களின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது என்பது எல்லோரும் அறிந்த செய்தி. தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்து நம் கண்முன் நிறுத்துவதில் சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான் என்றால் மிகையில்லை.
Chandru Krishna 16 Feb 2012 06:26 pm
நண்பர் "sevvanam", நடிகர் திலகம் மிக சிறந்த கலைஞன் (நன்கு கவனிக்க கலைஞர் இல்லை!) என்பதில் மாற்று கருத்து கிடையாது! ஆனால், அவரை சரியாக நம் இயக்குனர்கள் பயன்படுத்தி கொள்ள தவறி விட்டார்கள்! அவரும் நடிப்பை தவிர திரைப்பட துறையில் வேறு எதையும் கற்று கொள்ளவில்லை! அதனால், எடுப்பார் கைபிள்ளை ஆகிவிட்டார்! மிகை படுத்தி செய்வதை ஒரு சாரர் அதுவும் ஒரு காலகட்டத்தில் மற்றுமே ஏற்று கொள்ளப்படும்! மற்றவர்களுக்கு அந்த "மிகை நடிப்பு" வேடிக்கையாக விசித்திரமாக இருக்கும்! - "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!"
Mani 17 Feb 2012 11:44 am
சிவாஜியின் காலத்தில் நாடகத்தமிழ்தான் திரையில் பேசப்பட்டது. காலப்போக்கில் அது யதார்த்த தமிழ்நடை ஆனது வசனம். முதல் மரியாதையில் அவரது யதார்த்த நடிப்பை பார்க்கலாம். நவராத்ரி படம் ஒன்று போதும் அவரது திறமைக்கு.
TheDevil 16 Feb 2012 02:35 pm
கர்ணன் படம் வெளியான அன்று இதனுடன் போட்டிக்கு வந்த படம் வேட்டைக்காரன்! ஜெயித்தது கருப்பு வெள்ளை படம்!!
TheDevil 16 Feb 2012 02:44 pm
1964 -ல் வெளிவந்த MGR , சிவாஜி படங்கள் எவை தெரியுமா? MGR : தெய்வத்தாய், என் கடமை, படகோட்டி, பணக்கார குடும்பம், தாயின் மடியில், தொழிலாளி, வேட்டைக்காரன். Sivaji: ஆண்டவன் கட்டளை, கை கொடுத்த தெய்வம், முரடன் முத்து, நவராத்திரி, பச்சை விளக்கு, புதிய பறவை. Great year?
MANI 26 Feb 2012 12:14 am
பேர் வாங்கியது நடிகர்திலகம் படங்கள் மறந்துவிடதிர்கள் ,உலகுக்கு கர்ணனை அடையாளம் காட்டியது நடிகர்திலகம் .
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST