பிப்ரவரி 23-ம் தேதி சினிமா காட்சிகள் ரத்து!

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2012, 15:41 [IST]
திரைப்பட தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை ரத்து செய்யக் கோரி திரைப்படத் துறையினர் நடத்தும் நாடுதழுவிய போராட்டத்துக்கு ஆதரவாக வரும் பிப்ரவரி 23-ம் தேதி தமிழகம் முழுவதும் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசு சினிமா மேல் கொண்டு வந்திருக்கும் சேவை வரியை ரத்து செய்யக் கோரி இந்தியா முழுவதும் திரைத்துறையினர் அனைவரும் தயாரிப்புப் பணிகள், படப்பிடிப்பு மற்றும் திரையரங்க காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதற்கு ஆதரவாக சென்னை நகரிலுள்ள அனைத்து திரையரங்கங்களும் வருகிற பிப்ரவரி மாதம் 23ஆம் தேதியன்று மூடப்படும். அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English summary
Tamil Nadu film exhibitors association president Abhirami Ramanathan announced that all the shows will be cancelled on Feb 23rd to support the film industry's protest against union govt's service tax.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST