நிச்சயித்த பெண்ணை மணக்க நடிகர் கோபிசந்த் திடீர் மறுப்பு - மணப் பெண்ணின் தந்தை தற்கொலை!

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2012, 16:58 [IST]
ஜெயம் படத்தில் கொடூர வில்லனாக வந்த கோபிசந்த், நிஜத்திலும் வில்லனாகிப் போனதால், ஒரு உயிரே போய்விட்டது.

கடைசி நேரத்தில் தான் மணக்க வேண்டிய பெண்ணை கோபிசந்த் வேண்டாம் என்று சொன்னதால், பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜெயம் தமிழ் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமானார்.தெலுங்கில் கோபிசந்த் முன்னணி நடிகராக உள்ளார். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு 32 வயது ஆகிறது.

கோபிசந்துக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகள் பெயர் ஹரிதா. இவர் தில்குஷ் நகரைச் சேர்ந்த பிரபல வியாபாரி ராம்பாபு என்பவரின் மகள். திருமண வேலைகள் தீவிர நடந்தன. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடக் கொடுத்துவிட்ட நிலையில், திடீரென ஹரிதாவை மணக்க மறுத்து விட்டார் கோபிசந்த்.

இது பெண் வீட்டாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராம்பாபு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இது அவமானமாகிவிட்டது அவருக்கு.

மணமகள் தந்தையிடம் உறவினர்கள் திருமணம் நின்றதற்கான காரணத்தை கேட்டு துக்கம் விசாரிப்பதுபோல விசாரித்தனர்.இதனால் ராம்பாபு மனம் உடைந்து விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

திருமணத்தை கோபிசந்த் நிறுத்தியதால் விஷம் குடித்ததாக ராம்பாபு தெரிவித்தார் என உறவினர்கள் கூறினர். ராம்பாபு மரணத்தை தொடர்ந்து தில்குஷ் நகரில் வியாபாரிகள் ஒருநாள் கடை அடைப்பு நடத்தினர். போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

English summary
Industrialist V. Rambabu, 58, whose daughter was to be married to film star Gopichand next week, committed suicide by consuming poison at his residence in Malakpet, on Sunday. He was reportedly depressed because the marriage had been cancelled.
User Comments
Truth JustIN 21 Feb 2012 08:57 pm
புரிதல் இல்லை என்று தெரிந்தால், நிச்சய தார்ததுடன் நிறுத்தி விடிவது இரு குடும்பத்தாருக்கும், மணமகன், மணமகளுக்கும் நல்லது. பிரச்னை என்னவென்றே தெரியாமல் ஒருவரின் மேல் ஒட்டுமொத பழிபோடுவது வருந்ததக்கது, மீடியா நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம்.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST