விஜய்யின் துப்பாக்கி 'ட்ராப்'பா?

சனிக்கிழமை, பிப்ரவரி 18, 2012, 10:34 [IST]
துப்பாக்கி படம் கைவிடப்பட்டது என பல தரப்பிலும் செய்தி கிளம்பியிருப்பது விஜய்யை கடுப்பேற்றியுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் துப்பாக்கி. முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், திடீரென்று இந்தப் படத்தை ஒத்தி வைத்துவிட்டு, குறும்படம் ஒன்றின் தயாரிப்புப் பணிகளில் தீவிரமாகிவிட்டார் முருகதாஸ்.

இதனால், படம் கைவிடப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகிவிட்டது.

இயக்குநரும் ஒன்றும் சொல்லாமல் அமைதி காப்பதால், ஒருவேளை செய்தி உண்மைதானோ என்ற நினைப்பில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனிடம் விசாரித்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யிடம் இதுகுறித்து ரசிகர்கள் கேட்டதற்கு, "படம் ட்ராப்னு வர்ற செய்திகளை நம்பாதீங்க. சீக்கிரமே மீண்டும் தொடங்கிடும். பெப்சி பிரச்சினை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிடும்," என்றார் கொஞ்சம் கடுப்புடன்.

இப்போது கிடைத்துள்ள இடைவெளியும் விஜய்க்கு ரொம்ப பயனுள்ளதாக உள்ளதாம். பியூட்டி பார்லர் திறப்பு, செல்போன் கடை திறப்பு என நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ரசிகர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கும் போக முடிவெடுத்துள்ளாராம்.
English summary
Vijay denied the reports on his forthcoming movie Thuppaki. The actor told that the film isn't dropped and resume the shooting soon.
User Comments
vel murugan 20 Feb 2012 11:03 am
டேய் salae ... நீ என்ன குள்ளனுக்கு சொம்படிகுரிய...
Raja 19 Feb 2012 11:22 am
விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்
Radha Krishnan 24 Feb 2012 02:53 pm
தம்பி ராஜா தண்ணி அடிச்சிருக்கிய!!! விஜய் மூஞ்ச கிட்ட பார்த்து சொல்லு !!
salae 19 Feb 2012 12:21 am
director murugathas does not like vijay's acting at all. director shankar did not like vijay's acting too. during the shooting of movie nanban vijay took too many turns while jiva and srikanth done the act on their first turn. vijay once again proved that he is the worst actor!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Radha Krishnan 18 Feb 2012 03:19 pm
அண்ணே என்ன அர்த்ததுள்ள விஜய் துப்பாக்கி ட்ராப் நு டைட்டில் போட்டு இருக்கீங்க. ஹி ஹி ஹி
Komberi Mookan 18 Feb 2012 03:46 pm
அவனுக்கு இருக்குது ஒரு கீப்பு... அவகிட்ட தெரிஞ்சது ஒரு கேப்பு (Gape 'u) .... அதுல அவன் துப்பாக்கி விட்டது drop'u ...அதனால் அது ஆனது drop ..... போதுமாப்பு ....
Radha Krishnan 18 Feb 2012 05:09 pm
சூப்பர்அப்பு
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST