விஜய்-விக்ராந்த்தின் பாட்டி மரணம்!

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2012, 18:10 [IST]
Lalitha Neelakandan
ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜய்யின் பாட்டியுமான லலிதா நீலகண்டன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.

லலிதா நீலகண்டனின் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும் லலிதாவின் மருமகன் எஸ்ஏ சந்திரசேகரனே இயக்கினார்.

லலிதா நீலகண்டனுக்கு இரண்டு மகன்கள். பாடகரும் நடிகருமான எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர். இரண்டு மகள்கள் ஷோபா சந்திரசேகரன் மற்றும் ஷீலா. ஷோபாவின் மகன் நடிகர் விஜய். ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த்.

பாட்டி மீது மிகுந்த பாசமாக இருந்தார் விஜய். மகள் ஷோபா- மருமகன் சந்திரசேரனுடன் வசித்து வந்த லலிதா நீலகண்டனுக்கு நேற்று நெஞ்சுவலி வந்தது. அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று காலை அவர் மரணமடைந்தார்.

அவருக்கு நுங்கம்பாக்கம் தெரஸா சர்ச்சில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாலையில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. லலிதா நீலகண்டனுக்கு விஜய் ரசிகர்கள், திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

English summary
Lalitha Neelakandan, grand mother of Vijay and mother of Shobha Chandrasekaran has passed away in Chennai today at the age of 80.
User Comments
lurakoo lurakoo 29 Feb 2012 01:23 pm
விக்ராந்தின் அப்பா குமரிமுத்து
Soriyar soriyar 15 Feb 2012 05:57 pm
விஜயே இவளுக்கு சோப் போடானாமே?
raja 14 Feb 2012 08:05 pm
விஜய்க்கு நேற்று சூப்பர் ஸ்டார் அவார்ட் கொடுத்தது , பாட்டிக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது போல என்ன ஒரு ஷாக் ......................
Poolatti 14 Feb 2012 06:32 pm
விஜய்க்கு பாட்டியின் முகம் அப்படியே உள்ளது.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST