Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான 'அட்ஹாக் கமிட்டி'க்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted by:
Published: Thursday, June 21, 2012, 10:44 [IST]

Hc Bans Ad Hoc Committee Producer Council

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி' செயல்படுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பொருளாளர் எஸ்.தாணு ஆகியோர் தொடர்ந்த சிவில் வழக்கில், "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கும் (பெப்சி), தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சம்பளம் தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு 24 மணி நேர நோட்டீஸ் அளித்து கூட்டப்படுகிறது என்று செயலாளர் பெயரில் அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், சங்கத்தின் சார்பில் தற்காலிக குழு (அட்ஹாக் கமிட்டி) அமைக்கவும், சங்க செயல்பாட்டை கவனிக்க அக்குழுவுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

தடை விதிக்க வேண்டும்

இதை எதிர்த்து நான் நோட்டீஸ் அனுப்பினேன். இந்த நிலையில் எனக்கு வந்த தந்தியில், எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன், பொருளாளர் தாணு ஆகியோர் அந்த பொறுப்பில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு 15.4.12 அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. சங்கத்தில் தற்காலிக குழு அமைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

தற்காலிக குழுவை அமைக்க சங்க விதிகளில் இடமில்லை. 15.4.12 அன்று பொதுக்குழு கூடவுமில்லை. எனவே தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி ஆர்.சுப்பையா பிறப்பித்த உத்தரவு:

சங்கத்தின் தற்காலிக குழுவை அமைத்தது, சங்க பதிவுச் சட்டத்தின்படியோ அல்லது சங்க ஒழுங்குமுறை விதிகளின்படியோ அமையவில்லை. சங்கத்தின் நிர்வாகக் குழுவுக்கு, துணைக்குழு போன்ற குழுக்களை அமைத்துக்கொள்ள அதிகாரம் உள்ளது என்றும் சங்க விதிகளில் அதற்கு இடமுள்ளது என்றும் இப்ராகிம் ராவுத்தர் தரப்பில் வாதிடப்பட்டது.

சங்கத்தின் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான வகையில் அப்படிப்பட்ட குழுக்களை நிர்வாகக் குழு அமைத்துக் கொள்ளலாம். ஆனால் நிர்வாகக்குழு, தனது அதிகாரத்துக்கு இணையான மற்றொரு குழுவை அமைத்துக்கொள்வதற்கு சங்க விதியில் இடமில்லை. எனவே அவர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.

அட்ஹாக் கமிட்டிக்கு தடை

பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு 21 நாட்கள் முன்பே நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. அந்தக் கூட்டத்தில் சந்திரசேகரன், தேனப்பன், தாணு ஆகியோர் நேரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் விளக்கம் எதுவும் கேட்கப்படவில்லை. இது சட்டவிரோதமானது.

தயாரிப்பாளர் சங்கத்தில் தற்காலிக குழுவை ஏற்படுத்தியது, சட்டவிதிகளுக்கு முற்றிலும் முரணானது. சங்கத்தின் விதிமுறைகளை மீறி, 15.4.12 அன்று பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. எனவே அட்ஹாக் கமிட்டி என்ற தற்காலிக குழுவுக்கு தடை விதிக்கப்படுகிறது.

English summary
The Madras High Court has banned the ad-hoc committee of Tamil Film Producers Council presided by Ibrahim Rawdhar.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs