Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

'அப்படி போடு அருவாள... யப்பா... இது ஒலக மகா நடிப்புடா சாமி!!'

Posted by:
Published: Friday, July 20, 2012, 12:06 [IST]

Mahat Who Is That Guy Tapsi

மகத்தா... அது யாருன்னே தெரியாதுங்க. மனோஜ் மட்டும்தான் என் பிரண்ட். அவர் குடும்பத்துல நானும் ஒருத்தி. நான் மோகன்பாபு மகள் மாதிரி என்று மீண்டும் சத்தியம் அடிக்காத குறையாக சொல்ல ஆரம்பித்துள்ளார் டாப்சி.

மகத் - மனோஜ் இருவரும் டாப்சிக்காக போட்ட ஃபைட், சினிமா ஸ்ட்ன்டை விட பெரிதாகி, கோலிவுட் - டோலிவுட் என எங்கும் சிரிப்பாய் சிரித்துவிட்டது. இந்த சண்டைக்கு பின்னணி டாப்சி யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சைதான் என்பதும் தெரிந்த விஷயமே.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட டாப்சி, இதுவரை மகத் பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தார்.

இப்போது, அந்தக் குறை எதற்கு என்ற நினைப்பில் இன்னொரு விளக்கம் அளித்துள்ளார்.

"மகத் யாருன்னே எனக்குத் தெரியாது. சம்பந்தமே இல்லாம இப்படி என்னை ரெண்டு பேரோட சேர்த்துப் பேசுறது ரொம்ப வருத்தமா இருக்கு.

மகத் என்னை லவ் பண்ணதா சொன்னதுல உண்மை இல்ல. அவரை நான் ஒரு முறை கூட சந்திச்சதே இல்லை. யாருன்னே தெரியாத ஒருத்தர் எப்படி எனக்காக சண்டை போட்டார்னு சொல்றீங்க? இன்னொன்னு அந்த சண்டை நடந்ததா சொல்ற நாள்ல நான் கர்னூல்ல இருந்தேன்," என்கிறார் டாப்சி.

அப்படின்னா.. மகத்தும் டாப்சியும் வாரத்துக்கு இரு முறை ஏர்போர்ட்டில் சந்தித்தது, காரில் ஒன்றாக சுற்றிய படம் வெளியானதெல்லாம் கிராபிக்ஸா இருக்குமோ!

English summary
Actress Tapsi says that she didn't know Mahat and dont want to speak anything on his clash with Manchu Manoj.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL