Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பொன்னியின் செல்வன் - இப்போ செல்வராகவன் முறை!!

Posted by:
Updated: Thursday, July 26, 2012, 9:15 [IST]

Selvaragavan Talks About Ponniyin S

பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் ஆசை கொள்வதும், பின்னர் ஏதோ காரணங்களுக்காக கைவிடுவதும் வாடிக்கையான செய்தி ஆகிவிட்டது கோடம்பாக்கத்தில்.

அமரர் எம்ஜிஆர் இந்தப் படத்தை எடுக்க முயற்சித்தார். அதற்கு இயக்குநர் மகேந்திரனை வைத்து முழுமையாக திரைக்கதை வசனத்தைக் கூட எழுதிவிட்டார்.

ஆனால் அவர் அந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தபோது, அரசியலில் மகா பரபரப்பாகிவிட்டார். படம் நின்றது.

பின்னர் கமல்ஹாஸன் முயற்சி செய்வதாகக் கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இயக்குநர் மணிரத்னம் இந்த நாவலைக் கையிலெடுத்தார். விஜய், விக்ரம், ஆர்யா, மகேஷ்பாபு என பலர் நடிப்பதாகக் கூறப்பட்டது. மைசூர் லலிதமகாலில் ஷூட்டிங் நடத்த தேதியெல்லாம் குறித்த நிலையில், படத்தைக் கைவிட்டார் மணிரத்னம்.

இந்த நிலையில், அடுத்து செல்வராகவன் இந்தப் படத்தை எடுக்க ஆர்வமாக உள்ளதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு, விக்ரம், ஆர்யா மற்றும் ஜீவா போன்றோரை வைத்து இந்தப் படத்தை எடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

'இராஜ இராஜ சோழனாக' விக்ரமும், 'ஆதித்த கரிகாலனாக' ஆர்யாவும், 'வல்லவரையன் வந்திய தேவனாக' ஜீவாவும் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

நடக்குமா... அல்லது வேறு இயக்குநர் முதலிலிருந்து ஆரம்பிப்பாரா? பார்க்கலாம்!

Story first published:  Wednesday, July 25, 2012, 18:07 [IST]
English summary
It's now Selvaragavan's turn to take the mega Novel Ponniyin Selvan. According to his latest tweet, the director wanted to make it as a movie with Vikram, Arya and Jeeva.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST