twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோச்சடையான் சிக்கல்... பின்னணியில் அரை டஜன் அதிர்ச்சிக் காரணங்கள்!

    By Shankar
    |

    சென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் கடைசி நிமிடத்தில் வெளியாகாமல் தள்ளிப் போனதற்கு பல்வேறு காரணங்களை தமிழ் திரையுலகில் சொல்கிறார்கள்.

    படத்தின் தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் காரணங்களுக்காக படம் தள்ளிப் போனதாகச் சொன்னாலும், அதை பலரும் நம்பத் தயாராக இல்லை.

    இந்தப் படம் வெளிவராமல் போனதன் பின்னணியில் 7 காரணங்கள் உள்ளனவாம்...

    தனியார் வங்கி முட்டுக்கட்டை

    தனியார் வங்கி முட்டுக்கட்டை

    இந்தப் படத்துக்காக கடனாகப் பெற்ற ரூ 40 கோடியை உடனடியாக எடுத்து வைக்குமாறு நெருக்கடி கொடுத்துள்ள ஒரு தனியார் வங்கி, இப்போது நீதிமன்றத்துக்குப் போயுள்ளதாம். இதுதான் பிரதான காரணம் என்கிறார்கள்.

    தயாரிப்பாளர் - தியேட்டர்காரர்கள் முரண்

    தயாரிப்பாளர் - தியேட்டர்காரர்கள் முரண்

    இந்தப் படத்தின் முதல் வார வசூலில் 70 சதவீதத்தைத் தருமாறு தயாரிப்பாளர் தரப்பில் நிபந்தனை விதித்துள்ளார்கள். அதற்கடுத்த வார வசூலிலிருந்து 60-40 விகிதாச்சாரத்தை வைத்துக் கொள்ளலாம் என்கிறார்களாம். ஆனால் அதற்கு தியேட்டர்காரர்கள் தரப்பு ஒப்புக் கொள்ளவில்லையாம்.

    ஆனால் இதை மறுக்கும் தயாரிப்பாளர், தியேட்டர்காரர்கள்தான் அதிக சதவீதம் கேட்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பேசிய தொகையைத் தர மறுப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பு கூறுகிறது.

    சென்சார் பிரச்சினை

    சென்சார் பிரச்சினை

    படத்தின் முக்கியமான தெலுங்கு, இந்தி இரு மொழி பதிப்புகளுக்கு இன்னும் சென்சார் வழங்கவில்லை என்பதை ஏற்கெனவே கூறியிருந்தது நினைவிருக்கலாம். இந்த இரு மொழிகளில்தான் அதிக அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது.

    விநியோகஸ்தர்கள்

    விநியோகஸ்தர்கள்

    ஆரம்பத்திலிருந்தே கோச்சடையானை பொம்மைப் படம் என்கிற கண்ணோட்டத்திலேயே பார்த்து வரும் விநியோகஸ்தர்கள்தான் இந்தப் படத்துக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தனர். ஆனால் அவர்களும் படத்தின் முன்பதிவுக்குக் கிடைத்த மிரட்டலான ரெஸ்பான்ஸ் பார்த்து, வெளியிடும் முடிவுக்கு வந்தபோதுதான், வங்கி நெருக்கடி படத்தை தள்ளிப் போட்டது.

    ரஜினி தலையிடாமல் ஒதுங்கியது

    ரஜினி தலையிடாமல் ஒதுங்கியது

    படத்தின் வியாபாரம், வெளியீடு போன்ற சிக்கல்களில் தன்னை இழுக்க வேண்டாம்... தேவையான பப்ளிசிட்டிக்கு மட்டும் தான் வருவதாக முதலிலேயே ரஜினி தெளிவாகக் கூறிவிட்டார். இது தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்களை யோசிக்க வைத்துவிட்டது.

    3 டி வசதி இல்லாமை

    3 டி வசதி இல்லாமை

    தமிழகத்தின் பெருமளவு திரையரங்குகள் இன்னும் 3 டி வசதிக்கு மாறவில்லை. அதற்கு ஆகும் கூடுதல் செலவைச் செய்யவும் தயாராக இல்லை. இந்தப் படத்தை 3 டியில் பார்த்தால் நன்றாக இருக்கும். 2டி யைப் பார்க்க அவ்வளவு பேர் வருவார்களா என்ற சந்தேகத்தால், பெரும் விலை கொடுத்து படத்தை எடுக்க தியேட்டர்காரர்கள் தயங்கியதாகக் கூறப்படுகிறது.

    மே 23-க்குள் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் முடிந்து விடுமா...?

    English summary
    Here are some half a dozen reasons for the postponement of Rajini's Kochadaiiyaan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X