twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களை மதி, இல்லையெனில் ஒரே மிதி – பாலியல் வன்முறை சமூகத்திற்கு “பளார்” விடும் மர்தானி!

    |

    சென்னை: உலக அளவில் மூன்றில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்களாம் ஒரு நிமிடத்தில். இந்தியாவில் மட்டும் 8 நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை காணமல் போகின்றாராம்.

    காலம்காலமாக பெண் தெய்வங்களை வணங்கும் சமூகமே கூட, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தட்டிக் கேட்க துணிவதே இல்லை.

    அப்படிப்பட்ட வன்முறைகளை மக்களுக்கு சிறிதளவேனும் உணர்த்தும் வகையில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் "மர்தானி". இங்கு பார்க்கப் போவது அப்படத்தின் விமர்சனம் அல்ல.

    வேட்டையாடும் கொடூரம்:

    வேட்டையாடும் கொடூரம்:

    ரத்தமும், சதையுமாய் நம்மிடையே பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரியும் பெண்களை இச்சமூகம் எப்படி கொடூரமாய் வேட்டையாடுகின்றது என்பதன் பிரதிபலிப்பை.

    முரண்பாடாகும் உறவுகள்:

    முரண்பாடாகும் உறவுகள்:

    ஓடும் பஸ்ஸில் பலாத்காரம், சொந்த தகப்பனே மகளை பலாத்காரம், சித்தப்பா, பெரியப்பா, அண்ணன், தம்பி என்று பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ரத்த சொந்தங்களே முரணான உறவிற்கு பெண்களை உண்டாக்கும் கேவலமான சமூகத்தில்தான் வாழ்கின்றோம் நாம் தற்போது.

    இந்தியாதான் மையப்புள்ளி:

    இந்தியாதான் மையப்புள்ளி:

    இந்தியாவில் மட்டும் விபச்சாரத்திற்காக 8 நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை கடத்தப்படுகின்றாளாம். விபச்சார சமூகத்தின் மையப் புள்ளியாய் விளங்குவது சாட்சாத் நம்முடைய இந்தியாதான். என்னவொரு பெருமிதமான செய்தி பாருங்கள்!

    நாம்தான் நமக்கு பாதுகாப்பு:

    நாம்தான் நமக்கு பாதுகாப்பு:

    பெண்களே தங்களுக்கான முதல் பாதுகாப்பு என்ற செய்தியை தாங்கி வெளிவந்துள்ளது இப்படம். ஷிவானி சிவாஜி ராவ் என்ற கதாப்பாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் ராணி முகர்ஜி.

    உருவத்திற்கேற்ற குணம் வேண்டும்:

    உருவத்திற்கேற்ற குணம் வேண்டும்:

    புலி வேஷம் போட்ட உறுமனும், நாய் வேஷம் போட்டா குலைக்கணும், பெண்களா இருந்தா, நம்மை துச்சமாய் நினைக்கும் ஆண்களைப் பந்தாடணும் என்று கூறுகின்றது அவரது கதாப்பாத்திரம்.

    விபச்சார உலகம் மும்பை:

    விபச்சார உலகம் மும்பை:

    மும்பையில் பெண்களையும், இளம் சிறுமிகளையும் கடத்திச் சென்று விபச்சார தொழில் ஈடுபடுத்தும் வில்லனிடம் இருந்து அவர்களை எப்படி காவல் அதிகாரி ஷிவானி காப்பாற்றுகின்றார் என்பதே கதை.

    மனதை உருக்கும் காட்சிகள்:

    மனதை உருக்கும் காட்சிகள்:

    படத்தின் ஒவ்வொரு கோணத்திலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள், பெண்கள் எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தப்படுகின்றார்கள் என்பதை பார்க்கும் போது ரத்தக் கண்ணீரே வந்துவிடும் போலிருக்கின்றது.

    ரத்தம் சிந்தும் பெண்கள்:

    ரத்தம் சிந்தும் பெண்கள்:

    சிவப்பு விளக்கு பகுதி என்பதற்கு பாதிக்கப்பட்ட "பெண்களின் ரத்தம்" என்பதால்தான் அப்பெயர் வந்ததோ என்றே தோன்றுகிறது.

    கொலையல்ல தண்டனை:

    கொலையல்ல தண்டனை:

    "இந்திய சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளில் புகுந்து தப்பிக்க ஆயிரம் வழிகள் இருக்கு" என கடத்தல் கும்பல் தலைவன் கர்ஜிக்கும்போது, "அதே இந்திய சட்டத்தில், ஒருத்தனை ஒருத்தன் கொலை பண்ணினாதான் அது கொலை. நிறைய பேர் சேர்ந்து பண்ணினா அதுக்குப் பேரு தண்டனை" என்று ராணி முகர்ஜி சொல்லும்போது ஆண்களே கைத்தட்டுவதுதான் இப்படத்தின் உண்மையான சாதனை.

    மர்தானி என்றால் ஆண்மை:

    மர்தானி என்றால் ஆண்மை:

    மருதாணி என்பது நம்மைப் பொறுத்த வரையில் பெண்களின் கைகளில் இடப்படும் அழகுப் பொருள் மட்டுமல்ல. அதே உச்சரிப்பினைக் கொண்டுள்ள இந்தி வார்த்தையான "மர்தானி" என்பதற்கு ஆண்மை என்று பொருளாம்.

    வலுக்கட்டாயம்தான் ஆண்மையா?:

    வலுக்கட்டாயம்தான் ஆண்மையா?:

    காலம்காலமாக ஆண்களின் மார்புப் பதக்கமாக மட்டுமே பார்க்கப்படும் பெண்களை வலுக்கட்டாயமாக, துன்புறுத்தி அவர்களின் பெண்மையை பறிப்பது ஆண்மையே இல்லை என்று தோலுரித்துக் காட்டுகின்றது இப்படம்.

    சதை வெறியின் உச்சகட்டம்:

    சதை வெறியின் உச்சகட்டம்:

    ஆணானலும் சரி, பெண்ணானாலும் சரி ஆண், பெண் உறவு படைக்கப்பட்டதே சந்ததிகளை உருவாக்கத்தான். ஆனால், இதுபோன்ற சதை வெறி பிடித்த வக்கிர ஆண்கள்தான் அதனை மனிதமற்ற தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

    உயிர் போன வெறும் பிணம்:

    உயிர் போன வெறும் பிணம்:

    தீயில் எரிந்தால் பெண்ணோ, ஆணோ வெறும் சதைக் கோளம்தான். அந்த உண்மையை உணராமல் பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் ஆண்கள் இதுபோன்ற படங்களைப் பார்த்தாவது திருந்தினால் சரிதான்.

    கற்பிழப்பது நீதான் மனிதா நானல்ல:

    கற்பிழப்பது நீதான் மனிதா நானல்ல:

    "என் உடையைப் பார்க்காதே அது என் உரிமை. உன் பார்வையை நேராக்கிக் கொள். நரிகளும், நாய்களும் நிறைந்த இடத்தில் கூட வாழ்ந்துவிடலாம்... ஆண்கள் நிறைந்த சமூகத்தைப் பார்க்கும்பொழுது...என்னை நீ பலாத்காரம் செய்யும் போது, நான் கற்பிழக்கவில்லை. உன்னுடைய சந்ததிதான் இந்த உலகில் வாழும் தன்மையை இழக்கின்றது என்பதனை உணர்ந்துகொள் மனிதா" என்ற மனதை கனமாக்கும் கவிதை வரிகள் மட்டுமே சாட்சி.

    அடங்கி நடந்தால் உனக்கு நல்லது:

    அடங்கி நடந்தால் உனக்கு நல்லது:

    பெண்களை அரண்களாக தாங்க வேண்டிய ஆண்கள், அணைத்து விளையாட ஆரம்பித்தால், அது ஆண்டவனாகவே இருந்தாலும் அடித்துக் கொல்வதில் தவறில்லை என்ற செய்தியை பலமாக பதிவு செய்துள்ளது இப்படம். சுதாரித்து திருந்தி விடுங்கள் அரக்கத்தனமான ஆண்களே...இல்லையெனில் இனி உங்கள் உயிர் உங்கள் கையில் இருக்காது ஜாக்கிரதை!

    English summary
    A story based on released movie “Mardaani” which is based on sexual harassments belongs to girls and women.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X