twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு கிராமமே திருவிழா போல கொண்டாடிய 'சூறையாடல்'

    By Shankar
    |

    முதல் முறையாக தங்கள் ஊரில் நடந்த ஒரு படத்தின் ஷூட்டிங்கை, அந்த கிராமத்தினர் திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். திருவிழா நடந்த ஊர் ஆட்டுப் பாறை. தேனி மாவட்டத்தில் உள்ள கிராமம்.

    திரிலோக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரிலோக் சுரேந்திரன் பிள்ளை பந்தலம் தமிழில் முதல்முறையாக மிக அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் தான் 'சூறையாடல்'.

    இப்படத்தில் ஹீரோவாக ஸ்ரீபாலாஜி அறிமுகமாகிறார். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர் இவர்.

    அவருக்கு ஜோடியாக மலையாள வரவான காயத்ரி மற்றும் 'மதராசப்பட்டணம்', 'நர்த்தகி', 'பிறவி', ராசு மதுரவனின் 'சொகுசு பேருந்து', 'யாழ்' உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்த லீமா நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயன், ஜாக் ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    காதல்தான் அடிப்படை

    காதல்தான் அடிப்படை

    இந்த உலகத்தில் மனிதனுடைய எல்லா குணாதிசயங்களுக்கும் காதல்தான் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் அதற்கும் கூட ஒரு எல்லைக்கோடு உண்டு. அந்த எல்லைக் கோட்டை தாண்டும் போது அது மனிதனின் வாழ்க்கையில் பல சிக்கல்களை உருவாக்கி விடுகிறது.

    ஐவி சசியின் உதவியாளர்

    ஐவி சசியின் உதவியாளர்

    அந்த சிக்கல்களால் ஏற்படும் விளைவுகளைத் தான் காமெடி, செண்டிமென்ட், சஸ்பென்ஸ் கலந்த கிராமத்து கமர்ஷியல் படமாக விறுவிறுப்புடன் டைரக்டர் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தாமரை கண்ணன். இவர் 18 வருடங்களாக மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் ஐ.வி சசி மற்றும் சாஜன் ஆகியோரிடம் இணை, துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

    அதுபோக விஜய்டிவியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகாராணி', 'அவள்' ஆகிய மெகா ஹிட் தொடர்களின் இயக்குனரும் இவரே. இவர் பெரிய திரையில் இயக்குனராக அறிமுகமாகும் படம் தான் இந்த ‘சூறையாடல்'.

    மிதுனேஷ்வர்

    மிதுனேஷ்வர்

    கதை, திரைக்கதை, வசனத்தை தினேஷ் பல்லத் எழுத, படத்துக்கு அகிலேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல்களை மோகன்ராஜ், நாகமானஸி எழுத, மிதுனேஷ்வர் இசையமைத்திருக்கிறார். மிதுனேஷ்வருக்கு தமிழில் இது முதல் படமாக இருந்தாலும் இவர் தற்போது இரண்டு ஹிந்திப் படங்களிலும் பிஸியாக இருக்கிறார்.

    ஸ்ரீஜித் எடிட்டிங் செய்ய, ஸ்டண்டை ஆக்‌ஷன் பிரகாஷ் அமைத்திருக்கிறார். ஜாய் மதி நடனம் அமைக்க, புரொடக்‌ஷன் மேற்பார்வையை மனோகர், பிரகாஷ் திருவல்லா ஆகியோர் கவனிக்கிறார்கள்.

    கம்பம், தேனி, குமுளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தைப் பொருத்த வரை படப்பிடிப்பு நடந்த இந்தப் பகுதிகள் தான் ஹை-லைட்டானவை என்கிறார் டைரக்டர் தாமரை கண்ணன்.

    ஆட்டுப்பாறை

    ஆட்டுப்பாறை

    அதெப்படி ? என்று கேட்டபோது...

    "பாரதிராஜாவில் தொடங்கி பல டைரக்டர்கள் கம்பம், தேனி, குமுளி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆனால் கம்பத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆட்டுப்பாறை என்ற கிராமத்தில் யாருமே இதுவரை படப்பிடிப்பு நடத்தவில்லை.

    திருவிழா போல

    திருவிழா போல

    அந்த கிராமத்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ‘சூறையாடல்' தான். அதனால் தானோ என்னவோ இந்தப் படத்தின் படப்பிடிப்பையே அந்த கிராமத்து மக்கள் ஒரு திருவிழா போல கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டார்கள். அவர்கள் முழுமையான ஒத்துழைப்பால்தான் அங்கு படத்தின் 70 சதவீத படப்பிடிப்பை நடத்தினோம்," என்றார்.

    மலையாளத்திலிருந்து...

    மலையாளத்திலிருந்து...

    இப்படத்தின் தயாரிப்பாளர் திரிலோக் சுரேந்திரம் பிள்ளை பந்தலம் ஏற்கனவே மலையாளத்தில் சுரேஷ்கோபி, பாலா, ‘காதல்' சந்தியா நடித்த 'சகஸ்ரம்' என்ற படத்தை தயாரித்தவர். அவர் தமிழில் தயாரித்துள்ள முதல்படம் இது.

    விரைவில் உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் மனதை சூறாயாட வருகிறது இந்த ‘சூறையாடல்'.

    English summary
    Aattuppaarai, a small village near Kambam was celebrate Sooraiyaadal film shooting like a festival recently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X