Don't Miss!
- News ரூ.50 சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம்.. மகிழ்ச்சியில் விருதுநகர் டூ திண்டுக்கல்.. வேற லெவல்
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
பி.கே. படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு: ஆமீர் கான் ரொம்பவே தெளிவு தான்!
மும்பை: பி.கே. படத்தில் ஆமீர் கான் நிர்வாணமாக இருக்கும் போஸ்டரை அடுத்து அவர் அங்கமெல்லாம் மூடும்படி ஆடை அணிந்திருக்கும் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
நடிப்புக்கு பெயர் போன பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது நிர்வாணமாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார். அவர் நடித்து வரும் பி.கே. படத்தின் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீஸானது.
அதில் ஆமீர் நிர்வாணமாக நின்று கொண்டு கையில் ஒரு டேப் ரிக்கார்டரை வைத்து மானத்தை மறைத்திருந்தார்.
புகார், வழக்கு
நிர்வாண போஸ்டரை எதிர்த்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஆமீர் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தடை
பி.கே. படத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இரண்டாவது
இத்தனை களேபரத்திற்கு இடையே ஆமீர் கான் அடுத்த போஸ்டரை இன்று வெளியிட்டார். இதில் கொடுமை என்னவென்றால் புதிய போஸ்டரில் எதை வைத்தும் மானத்தை மறைக்காமல் நிர்வாணமாக நிற்பார் ஆமீர் என்று கூறப்பட்டது. அதனாலேயே இரண்டாவது போஸ்டருக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.
ஆடை
பி.கே. படத்தின் இரண்டாவது போஸ்டரில் ஆமீர் கான் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் ஆடை அணிந்துள்ளார். முதல் போஸ்டரில் கையில் டேப் ரிக்கார்டர் இருந்தது இரண்டாவதில் அதுவும் இருக்காது என்றார். அதன்படி இந்த போஸ்டரில் அவர் கையில் டேப் ரிக்கார்டர் இல்லை மாறாக டிரம்பெட் உள்ளது.
பில்ட்அப்
ஆமீர் மட்டும் அடுத்த போஸ்டரில் என் கையில் டேப் ரிக்கார்டர் இருக்காது என்று கூறாமல் இருந்திருந்தால் பி.கே. படத்தின் இரண்டாவது போஸ்டரை யாரும் இத்தனை ஆவலுடன் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நல்ல பப்ளிசிட்டி தான்.
கலை
தான் போஸ்டருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது ஆபாசம் இல்லை கலை என்று வேறு ஆமீர் ஒரு பிட்டை போட்டு பலரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.