twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாதனை நாயகி மனோரமா “ஆச்சி”யின் பிறந்த நாள் இன்று...!

    |

    சென்னை: தமிழ் திரைப்பட உலகின் ஒளிசிந்தும் நட்சத்திரமான மனோரமா ஆச்சியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.

    தமிழ் திரைப்பட ரசிகர்களால் "ஆச்சி" என அன்போடு அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943 ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் பிறந்தார்.

    இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த இவர் தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர்.

    கின்னஸ் சாதனை:

    கின்னஸ் சாதனை:

    தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது. அவர் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

    பத்மஸ்ரீ விருது:

    பத்மஸ்ரீ விருது:

    அது மட்டுமல்லாமல் கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான "பத்ம ஸ்ரீ விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

    விருதுகளின் நாயகி:

    விருதுகளின் நாயகி:

    மேலும் தமிழக அரசின் "கலைமாமணி விருது", புதிய பாதை திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான "தேசிய விருது", மலேசிய அரசிடம் இருந்து "டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது", கேரளா அரசின் "கலா சாகர் விருது", "சினிமா எக்ஸ்பிரஸ் விருது", சிறந்த குணச்சித்திர நடிகைக்காக அண்ணா விருது, என்.எஸ்.கே விருது, எம்.ஜி.ஆர். விருது, ஜெயலலிதா விருது மற்றும் பல முறை "ஃபிலிம்ஃபேர் விருதுகள்" எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

    ஆச்சியின் சாதனை வெற்றி:

    ஆச்சியின் சாதனை வெற்றி:

    நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த "ஆச்சி" மனோரமாவின் பிறந்தநாளில் அவரை வாழ்த்துவதின் மூலம் அவரின் புகழ் மென்மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை.

    English summary
    Actress Manorama celebrates her birthday today. she is a fantastic actress in Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X