twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குண்டுவெடிப்பில் பறி போன பார்வை... 28 வருடங்களுக்குப் பின் திரும்பப் பெற்றார் சங்கர்கணேஷ்

    |

    சென்னை: குண்டுவெடிப்பில் கண்பார்வையை இழந்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷுக்கு நவீன தொழில்நுட்ப சிகிச்சையால் மீண்டும் பார்வைக் கிடைத்துள்ளது.

    பிரபல தமிழ் இசையமைப்பாளரான சங்கர் கணேஷ், புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் நடந்த விபத்து ஒன்று அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. வீட்டிற்கு வந்த மர்ம பார்சல் ஒன்றைப் பிரித்த போது, உள்ளேயிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அவரது கை மற்றும் கண்ணில் காயமேற்பட்டது.

    காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்ட போதும், கண்பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவ உலகின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சுமார் 28 வருடங்களுக்கு பின்னர், தற்போது இழந்த தன் பார்வையை மீண்டும் பெற்றுள்ளார் சங்கர்கணேஷ்.

    இது தொடர்பாக சங்கர்கணேஷ் கூறியதாவது:-

    வெடிகுண்டு தாக்குதல்...

    வெடிகுண்டு தாக்குதல்...

    1980களில் நான் புகழின் உச்சியில் இருந்தேன். அப்போது ஒரு நாள் எனக்கொரு பார்சல் வந்திருந்தது. அதனை நான் பிரித்த போது, பலத்த சத்தத்துடன் அது வெடித்தது. சுற்றிலும் ஒரே புகை. எனக்கு கண்னெல்லாம் எரிச்சல், பார்சலைப் பிடித்திருந்த கைகளில் காயம்.

    கைகளில் காயம்...

    கைகளில் காயம்...

    உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம். கைகளில் ஏற்பட்ட காயம் ஆறியது. ஆனபோதும் தழும்புகளை மறைக்க இன்று வரை தொடர்ந்து கையுறை அணிந்து வருகிறேன்.

    சமயத்தில் உதவிய எம்.ஜி.ஆர்....

    சமயத்தில் உதவிய எம்.ஜி.ஆர்....

    இந்த விபத்தால் எனது திரை வாழ்க்கை பாதிக்கப் பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற சமயம் நான் முழுவதும் குணமாகும் வரை எனது புகைப்படத்தை பத்திரிக்கைகளில் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார் என நலம் விரும்பிகளில் ஒருவரான எம்.ஜி.ஆர்.

    பார்வை பாதித்தது...

    பார்வை பாதித்தது...

    விபத்து காரணமாக எனது பார்வை மங்கலானது. என்னால் எதையும் தெளிவாக பார்க்க இயலவில்லை. இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளானேன்.

    நவீன சிகிச்சை...

    நவீன சிகிச்சை...

    சமீபத்தில் இந்த நவீன சிகிச்சைப் பற்றிக் கேள்விப்பட்டு மருத்துவமனை சென்று விசாரித்தேன். மருத்துவர்கள் அளித்த விளக்கங்களால் நம்பிக்கை ஏறப்பட்டது. இப்போது பார்வையும் திரும்பக் கிடைத்து விட்டது.

    கண் தானம்...

    கண் தானம்...

    எனது கண் பார்வை முன்னை விட தற்போது தெளிவாக உள்ளது. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி. எனது கண்களை நான் கண் தானம் செய்துள்ளேன். அனைவரும் தங்களது கண்களை கண்தானம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கண்பார்வை பாதிப்பு...

    கண்பார்வை பாதிப்பு...

    சங்கர் கணேஷுக்கு ஏற்பட்ட இப்பிரச்சினை வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்குபவர்கள், பட்டாசுத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் நெருங்கிய சொந்தத்தில் மணமுடித்தவர்கள் ஆகியோருக்கு உண்டாகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சிகிச்சை...

    சிகிச்சை...

    மேலும், இச்சிகிச்சையின் மூலம் சேதமடைந்த விழித்திரையில் விஷேசித்த பசை கொண்டு இக்குறை சரி செய்யப் படுவதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

    English summary
    A gift parcel sent by a 'fan' 28 years ago threw music director Shankar Ganesh's life into darkness, literally. A bomb in the pack went off, injuring his eyes and hands. Ganesh lost vision in one eye. Recently, the musician regained sight after surgeons at Agarwal Eye Hospital implanted an artificial lens using a biological glue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X