twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்

    By Mayura Akilan
    |

    ஹைதராபாத்: தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 90.

    தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் நாகார்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வரராவ் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்தவர்.

    சமீபத்தில் தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்ப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார்.

    தேவதாஸ்

    தேவதாஸ்

    1940-ம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு உட்பட பல்வேறு மொழிப்படங்களில் நாகேஸ்வரராவ் நடித்துள்ளார். தேவதாஸ் படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

    9 வேடங்களில் நடிப்பு

    9 வேடங்களில் நடிப்பு

    'இட்டாரு மித்ருடு' என்ற படத்தில் நாட்டிலேயே முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்த இவர், ‘நவராரி' என்ற படத்தில் 9 வேடங்களில் நடித்துள்ளார். இது தமிழில் சிவாஜி கணேசன் நடித்த ‘நவராத்திரி' என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

    மகன் பேரனுடன் நடிப்பு

    மகன் பேரனுடன் நடிப்பு

    நாகேஸ்வர ராவ், சுமார் 71 ஆண்டுகளாக பல தலைமுறைகளை கடந்து நடித்துள்ளார். தனது மகன் நாகார்ஜூனா, பேரன் நாக சைதன்யா ஆகியோருடன் இணைந்து திரைப்படத்தில் நடித்துள்ளார் நாகேஸ்வரராவ்.

    படதயாரிப்பாளர்

    படதயாரிப்பாளர்

    இவர் நடிப்பு மட்டுமின்றி ‘அன்னபூர்ணா புரொடக்ஷன்ஸ்' என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார்.

    தாதாசாகேப் பால்கே விருது

    தாதாசாகேப் பால்கே விருது

    இந்தியாவில் திரைப்படத்துறையில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே' விருது பெற்றுள்ள நாகேஸ்வர ராவ், தனது சிறந்த நடிப்புக்காக ‘பத்ம விபூஷண்' உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    ஏ.என்.ஆர் தேசிய விருது

    ஏ.என்.ஆர் தேசிய விருது

    மேலும் தேசிய அளவில் திரைப்படத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கடந்த 2005-ம் ஆண்டு முதல் இவரது பெயரில் ‘ஏ.என்.ஆர். தேசிய விருது' வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    அமலாவின் மாமனார்

    அமலாவின் மாமனார்

    மறைந்த நாகேஸ்வர்ராவ், நடிகை அமலாவின் மாமனார் ஆவார். அக்கினேனி நாகேஸ்வரராவின் மகன் நாகார்ஜூனாவை அமலா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு அகில் என்ற மகன் இருக்கிறார்.

    English summary
    Legendary Telugu film actor, Akkineni Nageswara Rao passed away at a private hospital in Hyderabad at 2.12 am on Wednesday. He was suffering from cancer. He was 91 and is survived by three daughters and two sons, one of whom is actor Nagarjuna.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X