twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    '2016-ல் பாஜக ஆட்சி.. ரஜினி முதல்வர்': ரஜினியுடன் அரசியல் 'பேச்சை'த் தொடங்கிய அமித் ஷா!

    By Shankar
    |

    'அரசியலில் ரஜினி.. அல்லது ரஜினியைச் சுற்றி நடக்கும் அரசியல்' பற்றி இன்று நேற்றல்ல.. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக எழுதி வருகிறது பத்திரிகை உலகம். ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்களும் மக்களும் விமர்சகர்களும்.

    ஒரு கட்டத்தில் ரசிகர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டாலும், மக்களும் விமர்சகர்களும் விடுவதாக இல்லை.

    ரஜினியும் எப்போதெல்லாம் அரசியல் பற்றிய கேள்விகள் வந்தாலும், அது ஆண்டவன் கையில் என்று தொடர்ந்து கமா போட்டுக் கொண்டே வருகிறார்.

    இந்த முறை வந்துடுவார்...

    இந்த முறை வந்துடுவார்...

    இப்போது ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவார் போலிருக்கிறது என அரசியல் உலகில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள், திரை மறைவில் நடக்கும் சில விஷயங்களை மோப்பம் பிடித்து!

    பிரதமர் மோடியின் விருப்பம்

    பிரதமர் மோடியின் விருப்பம்

    இப்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, ரஜினிக்கு எந்த அளவு நெருக்கமான நண்பர் என்பது உலகமறிந்தது. அவரது விருப்பம் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான். அதை அவரே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ரஜினியிடமும் பலமுறை சொல்லிவிட்டாராம்.

    2016-ல் பாஜக ஆட்சி

    2016-ல் பாஜக ஆட்சி

    தமிழகத்தில் 2016-ல் பாஜக ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் அக்கட்சியின் முழக்கம், குறிக்கோள். அதற்கு எந்த அளவு வாய்ப்புகள் உள்ளன? பூஜ்ஜியம்தான். ஆனால் ஒரு நபரை உள்ளே கொண்டுவந்தால், இந்த பூஜ்ஜியம் போய் ராஜ்ஜியம் கிடைக்கும் என நம்பும் பாஜக, ரஜினியை குறிவைத்துள்ளது.

    நடக்குமா?

    நடக்குமா?

    இதெல்லாம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தபோது, ஏன் நடக்காது என்று கூறி, பாஜக தலைவரும் தனது நெருக்கமான சகாவுமான அமித் ஷாவிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் நரேந்திர மோடி.

    ரஜினி முதல்வர்

    ரஜினி முதல்வர்

    '2016-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி... ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர்' இந்த இரண்டு விஷயங்களை மட்டுமே பிரதானமாகச் சொல்லி ரஜினியிடம் முதல் கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறாராம் அமித்ஷா.

    மங்களூரில்

    மங்களூரில்

    சில தினங்களுக்கு முன் ரஜினியிடம் 'நீங்கள் தமிழகத்தின் முதல்வராவது எப்போது?' என்று மங்களூரில் ரஜினியிடம் நிருபர்கள் கேட்டபோது, வழக்கம்போல ஆண்டவன் கையில் என்று சொல்லாமல், அது மக்களின் கையில் உள்ளது என்றதோடு, தொன்னூறுகளில் ஒரு நாள் தான் சாலையில் நடந்த போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதில் முதல்வர் ஜெயலலிதா சிக்கிக் கொண்டதையும், பின்னர் போலீசார் தன்னை காரில் ஏற்றி அனுப்பிவிட்டு, போக்குவரத்தை சீராக்கியதையும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

    லிங்காவுக்குப் பிறகு

    லிங்காவுக்குப் பிறகு

    அமித் ஷாவிடம் அரசியல் குறித்து ஆர்வத்துடன் பேசிய ரஜினி, பாஜகவில் சேர்வது குறித்து எதுவும் உறுதியாகக் கூறவில்லையாம்.

    ஆனால் லிங்கா வெளியான பிறகு இதுகுறித்து மீண்டும் பேச பாஜக தலைவர் அமித் ஷா முடிவு செய்திருப்பதாக பாஜக தரப்பில் கூறுகின்றனர்.

    English summary
    Rumors are floating around in Tamil Nadu political circle that PM Narendra Modi’s close confidante Amit Shah is in talks with Superstar asking him to join BJP and be the BJP’s candidate for 2016’s TN CM post.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X