twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அங்குசம் படத்தில் முதல்வரை தவறாக சித்தரிக்கவில்லை... இயக்குநர் மனுக்கண்ணன் விளக்கம்

    |

    சென்னை: தனது அங்குசம் படத்தில் தமிழக அரசை, முதல்வரையோ தவறாக சித்தரிக்கவில்லை என இயக்குநர் மனுக்கண்ணன் விளக்கமளித்துள்ளார்.

    தகவல் அறியும் சட்டத்தை அடிப்படையாக வைத்து இயக்குநர் மனுக்கண்ணன், 'அங்குசம்' என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்தது. படத்திற்கு ரசிகர்கள் தரும் ஆதரவை நேரில் காண தியேட்டர் ஓன்றிற்கு சென்று விட்டு திரும்பும் போது, சாலையில் வைத்து மர்மநபர்களால் தாக்கப் பட்டார் மனுக்கண்ணன்.

    அதனைத் தொடர்ந்து சிகிச்சைப் பெற்ற மனுக்கண்ணன் நேற்று, பாதுகாப்புக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :-

    அங்குசம்...

    அங்குசம்...

    நான் தகவல் அறியும் சட்டம் பற்றி அங்குசம் என்ற திரைப்படம் எடுத்துள்ளேன். இந்த படம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வெளியாயுள்ளது.

    தாக்குதல்...

    தாக்குதல்...

    மேலும் தியேட்டருக்கு சென்று நிலவரம் அறியலாம் என்ற எண்ணத்தில் அமைந்தகரைக்கு வந்தபோது அடையாளம் தெரியாத சில நபர்களால் நானும், எனது மேனேஜர் குமரனும் தாக்கப்பட்டோம். முறைப்படி அமைந்தகரை காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, எப்.ஐ.ஆர். பதிவாகியுள்ளது.

    அச்சுறுத்தல்...

    அச்சுறுத்தல்...

    இத்தருணத்தில், நாங்கள் பலத்தடைகளை தாண்டி இந்த படத்தை வெளியிட்டுள்ளோம். சமூக நோக்கத்தோடு எடுத்துள்ள இந்த படத்திற்கு பல அச்சுறுத்தல்களும், தொடர்ந்து தடைகளும்û வந்த வண்ணமே உள்ளது.

    வரிசலுகை...

    வரிசலுகை...

    வரிவிலக்கு சலுகை கூட போராடி பெறவேண்டிய கட்டாய சூழலுக்கு உள்ளாக்கப்பட்டோம்.

    வரவேற்பு...

    வரவேற்பு...

    பல பத்திரிக்கைகளும், சமூக ஆர்வலர்களும் இந்த படத்தை பாராட்டி இதுபோன்ற சமூக சிந்தனையுள்ள படங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்று கேட்கின்ற சூழ்நிலையில், இதுபோன்ற அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் தொடர்ந்தால், எந்த ஒரு நல்ல விஷயங்களை யாரும் எடுக்கவோ, கூறவோ முடியாத சூழ்நிலை தான் நிலவும் இந்த நாட்டில்.

    அச்சம்...

    அச்சம்...

    மேலும், இதனை தொடர்ந்து சமுக விரோதிகள் எங்கள் மீது மென்மேலும் தாக்குதல் தொடருவார்கள் என்று அஞ்சுகிறோம்.

    தவறாக சித்தரிக்கவில்லை...

    தவறாக சித்தரிக்கவில்லை...

    மேலும் அங்குசம் திரைப்படத்தில் தமிழக முதல்வரையோ, அரசையோ தவறாக சித்தரிக்கவில்லை என்பதனை கூறிக்கொள்கிறோம்.

    பாதுகாப்பு...

    பாதுகாப்பு...

    ஆகவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்ளுமாறும், வேறெந்த அச்சுறுத்தலும் இன்றி எங்கள் படம் தொடர்ந்து மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும்' என இவ்வாறு தனது மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The director of the film Ankusam which speaks about the right to information act has explained that he didn't mentioned about the chief minister or tamilnadu government in the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X