twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓட்டு போடாமல் விருது விழாவில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பாலிவுட் பிரபலங்கள்

    By Siva
    |

    மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் பாலிவுட் பிரபலங்கள் அமெரிக்காவின் தம்பா பேயில் நடக்கின்ற சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் கலந்து கொள்ளச் சென்றுவிட்டனர்.

    நாடாளுமன்ற தேர்தலில் மும்பை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் தம்பா பே பகுதியில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில்(ஐஐஎப்ஏ) கலந்து கொள்ள பாலிவுட் பிரபலங்கள் பலர் சென்றுள்ளனர். நேற்று துவங்கிய இந்த விருது விழா வரும் 26ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு நடக்கிறது.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் பிரபலங்கள் சிலர் வாக்களிக்கமால் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டனர். நடிகர் ஷாஹித், நடிகைகள் தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் எல்லாம் அமெரிக்காவில் உள்ளனர். அதே நேரம் இன்று வாக்களித்த பாலிவுட் பிரபலங்களை பார்ப்போம்,

    ஆமீர் கான்

    ஆமீர் கான்

    நடிகர் ஆமீர் கான் தனது மனைவியும் இயக்குனருமான கிரண் ராவுடன் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    ஷில்பா ஷெட்டி

    ஷில்பா ஷெட்டி

    நடிகை ஷில்பா ஷெட்டி ஓட்டு போட்டுவிட்டு மை படிந்த விரலுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

    ஸ்ரேயா கோஷல்

    ஸ்ரேயா கோஷல்

    நான் வாக்களித்துவிட்டேன். நீங்களும் சென்று வாக்களியுங்கள் என்று பாடகி ஸ்ரேயா கோஷல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    ப்ரீத்தி ஜிந்தா

    ப்ரீத்தி ஜிந்தா

    குறைசொல்வதை விட்டுவிட்டு செயலில் இறங்க வேண்டிய நேரம். அனைவரும் ஓட்டு போடுங்கள் அல்லது எப்பொழுதும் அமைதியாக இருங்கள் என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா ட்வீட் செய்துள்ளார்.

    மாதுர் பந்தர்கர்

    மாதுர் பந்தர்கர்

    பாலிவுட் இயக்குனர் மாதுர் பந்தர்கர் வாக்களித்துவிட்டு மை படிந்த விரலுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    English summary
    Few of the Bollywood celebrities skipped voting to attend IIFA in Thampa Bay in the USA.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X