twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    4 நாட்களில் அஜீத்தின் 'வீரம்' வசூல் எவ்வளவு?

    By Siva
    |

    சென்னை: அஜீத்தின் வீரம் படம் ரிலீஸான நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.31 கோடி வசூல் செய்துள்ளது.

    சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா ஜோடி சேர்ந்த வீரம் படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம் தேதி ரிலீஸானது. நகரத்து ஹீரோவாக வலம் வந்த அஜீத் நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார்.

    படத்திற்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    முதல் நாள்

    முதல் நாள்

    வீரம் ரிலீஸான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. வீரம் படத்திற்கு குட்டீஸ்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    அதிக அரங்குகள்

    அதிக அரங்குகள்

    வீரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கோவையில் படம் ரிலீஸான மறுநாள் கூடுதல் தியேட்டர்களில் வீரம் திரையிடப்பட்டது. மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால் வீரம் படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன.

    வார இறுதி

    வார இறுதி

    வார இறுதி நாட்களில் வீரம் படம் இந்தியாவில் மட்டும் ரூ.17.8 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் வேட்டை மேலும் தொடரும் என்று கூறப்படுகிறது.

    ரூ.31 கோடி

    ரூ.31 கோடி

    வீரம் ரிலீஸான நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ.31 கோடி வசூலித்துள்ளது. வீரம் ரிலீஸான தியேட்டர்கள் முன்பு எல்லாம் அஜீத்தின் பிரமாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
    வார இறுதி நாட்களில் வீரம் தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடி வசூலித்துள்ளது.

    English summary
    Ajith starrer Veeram has reportedly beat Vijay's Jilla in the weekend collection in Tamil Nadu. Veeram has minted Rs. 15.5 crore in the state while Jilla raked in Rs. 14.5 crore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X