twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பைசூலின் நான்காவது ஜாமீன் மனுவும் தள்ளுபடி.. ஆனால் போலீசிடம் மட்டும் சிக்கவே இல்லை!

    By Shankar
    |

    சென்னை: சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா கொடுத்த புகாரில் கைதாமலிருக்க பைசூல் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நான்காவது முறையாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

    சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதா திருவல்லிக்கேணி தொழில் அதிபர் பைசூல் மீது கடந்த மாதம் செக்ஸ் மற்றும் பண மோசடி புகார். அதில் பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி 'செக்ஸ்' உறவு வைத்துக் கொண்டார் என்றும், ரூ.50 லட்சம் பணத்தையும் மோசடி செய்து விட்டார் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    radha and faizul

    தலைமறைவாக இருந்த பைசூலை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் 3 முறை கோர்ட்டில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகின.

    இதனால் எந்த நேரத்திலும் பைசூல் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையே பைசூல் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வந்த ராதா, யாரும் எதிர்பார்க்காத வகையில் மனம் மாறி தனது புகார் மனுவை வாபஸ் பெறுவதாகக் கூறினார்.

    ஆனால் ராதா விவகாரம் அத்துடன் முடியவில்லை.

    சில தினங்கள் கழித்து திடீரென மீண்டும் கமிஷனர் அலுவலத்துக்கு வக்கீலுடன் மீண்டும் வந்தார் ராதா. அப்போது அவர், 'என்னை மிரட்டி புகார் மனுவை வாபஸ் பெறச் செய்தனர். என்னை தனி அறையில் அடைத்து வைத்து பைசூல் தன்னை சித்ரவதை செய்ததுடன், செல்போனையும் உடைத்துப் போட்டு விட்டார்,' என்று பரபரப்பான புதிய குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால் ராதா - பைசூல் பிரச்சினை மீண்டும் சிக்கலானது.

    இதையடுத்து 4 -வது முறையாக பைசூல் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடியானது. போலீஸ் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக பைசூல் தொடர்ந்து தலை மறைவாகவே இருந்து வருகிறார். வழக்கமாக நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியானதும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய போலீசார் வேகம் காட்டுவார்கள்.

    ஆனால் 4 முறை முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியான பின்னரும், பைசூல் கைது செய்யப்படாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ராதா, போலீஸ் மீது குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. போலீசார் கண்ணை மறைத்து விட்டு இத்தனை நாளும் பைசூல் எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது.

    இது தொடர்பாக தி.நகர் துணை கமிஷனர் பகலவன் கூறுகையில், "ராதா கொடுத்த புகாரின் அடிப்படையில் பைசூலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. பைசூலை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர் கைது செய்யப்படுவார்," என்றார்.

    English summary
    The Madras High Court has denied anticipatory bail to Faizul, who is wanted by Chennai police in actress Radha case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X