twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷ் 25: ‘வேலையில்லா பட்டதாரி’ வெற்றி வாகை சூடுமா?

    By Mayura Akilan
    |

    தனுஷ், அமலா பால் நடிப்பில் தயாராகி உள்ள 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் ஜூலை 18ம் தேதி வெளியாக உள்ளது.

    தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா, சுரபி, விவேக், பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

    இது தனுஷின் 25 படம் என்பதால் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    தனுஷ் சொந்த தயாரிப்பு

    தனுஷ் சொந்த தயாரிப்பு

    தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி'. அவருடைய சொந்த நிறுவனமான வொண்டர்பார் தயாரிக்கிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார்.

    ரசிகர்களைக் கவர்ந்த ட்ரெய்லர்

    ரசிகர்களைக் கவர்ந்த ட்ரெய்லர்

    'வேலையில்லா பட்டதாரி' தனுஷின் 25 வது படம் என்பதால் படத்தின் ட்ரெய்லர், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்தது.

    திருமணத்திற்குப்பின்

    திருமணத்திற்குப்பின்

    நடிகை அமலா பால் திருமணத்திற்கு பிறகு வெளியாகும் முதல் படம் 'வேலையில்லா பட்டதாரி' என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    தனுஷ் – விவேக்

    தனுஷ் – விவேக்

    இப்படத்தில் தனுஷுடன் கைகோர்த்திருக்கிறார் விவேக். ‘படிக்காதவன்', ‘மாப்பிள்ளை', ‘உத்தம புத்திரன்' ஆகிய படங்களில் இருவரும் ஏற்கெனவே காமெடியில் இணைந்து நடித்துள்ளனர். இப்போது வேலையில்லா பட்டதாரியில் இணைகின்றனர்.

    அனிருத் இசையில் தனுஷ் பாடல்கள்

    அனிருத் இசையில் தனுஷ் பாடல்கள்

    அனிருத் இசையில் அனைத்து பாடல்களையும் தனுசே எழுதி பாடியிருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியானது.

    அம்மா சென்டிமென்ட்

    அம்மா அம்மா நீ எங்க அம்மா

    ஒன்னவிட்டா எனக்காரு அம்மா என்ற அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்றை எழுதியுள்ளார் தனுஷ். இது பற்றி கருத்து கூறிய தனுஷ் அம்மாவைப் பற்றிய பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பாடல் எழுதுவதிலேயே சுலபமானது அம்மவைப் பற்றி எழுதுவது தான். எல்லோருக்கும் அம்மாவை பிடிக்கும். அம்மவைப் பற்றி புகழ்ந்து எழுதிக்கொண்டே இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

    தத்துவப்பாடல்

    தத்துவப்பாடல்

    "ஹே வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன்
    போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன்
    மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
    அடிவாங்கியே நான் ஸ்ட்ராங் ஆனேன் மாயாண்டி" என்ற கருத்துக்கள் அடங்கிய பாடலும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

    காக்கா முட்டையில

    காக்கா முட்டையில

    "ஏ இங்க பாரு கூத்து ஜோரு
    காமெடி யாரு அட நம்ம சாரு
    மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
    காக்கா முட்டையில் மயிலு பொறக்குமா" என்ற தத்துவப்பாடலும் வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்றுள்ளது.

    வாட் எ கருவாடு

    வாட் எ கருவாடு

    ஒய் திஸ் கொலைவெறி பாணியில் ஒரு பாடல் எழுதியுள்ளார் தனுஷ்.
    What a கருவாட் What a கருவாட்
    What a கருவாடு What a கருவாட்
    What a கருவாட் What a கருவாட்
    What a கருவாடு
    ஏ சுட்ட வட போச்சுடா What a கருவாட்
    என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா What a கருவாட்
    என் கட்டம் அழிஞ்சு போச்சுடா What a கருவாட்
    ரொம்ப மட்டம் தட்டியாசுடா What a கருவாட்
    நான் கருத்து சொல்ல போறேண்டா
    போதும்பா Off பண்ணிடலாமா
    தோ இப்ப எப்டி Off பண்றேன் பாரேன்.

    என்பதுதான் அந்தப் பாடல்.

    மேலும் இரண்டு பாடல்கள்

    மேலும் இரண்டு பாடல்கள்

    அதோடு "வேலை இல்லா பட்டதாரி
    தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி"


    "போ இன்று நீயாக வா நாளை நாமாக
    உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
    ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே"

    என படத்தின் அனைத்துப் பாடல்களையும் தனுஷ் எழுதியுள்ளார்.

    பாடல் எழுதுவது ஈஸி

    பாடல் எழுதுவது ஈஸி

    வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது பேசிய தனுஷ் "பாட்டு எழுதுவதற்காக நாங்கள் பெரிய ரிஸ்க் எல்லாம் எடுப்பதில்லை. மொத்தமாக இரண்டு மணிநேரத்தில் பாடல் எழுதி இசையமைத்துவிடுவோம். ரெகார்டிங் பணி மட்டும் தான் நேரம் எடுத்துக்கொள்ளும் என்று கூறியிருந்தார். அது சரிதான் என்று இந்த பாடல்களை கேட்ட உடன் புரிந்து போனது.

    சொந்த தயாரிப்பு ஏன்

    சொந்த தயாரிப்பு ஏன்

    வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தை தான் தயாரிப்பதற்கு காரணம், இது தன்னுடைய 25-வது திரைப்படம் என்பது தான். தனது 25-வது திரைப்படம் சொந்த பேனரில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்தேன்" என்று தனுஷ் கூறியிருந்தார். தானே தயாரிப்பாளர் என்பதால் துணிந்து ரிஸ்க் எடுக்க முடியும் என்பது தனுஷ் எண்ணம்.

    வெற்றி வாகை சூடுவானா?

    வெற்றி வாகை சூடுவானா?

    மரியான், நையாண்டி படங்களுக்குப் பின்னர் வெளியாகும் வேலையில்லா பட்டதாரி வெற்றிவாகை சூடுவானா? அடுத்தவாரம் தெரியும்.

    English summary
    Velai Illa Pattathari Movie releasing on July 18th Friday 2014 Starring Dhanush and is a plausible time for the motion picture to hit the screens. Escape Artists Motion Pictures.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X