twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விவாகரத்து முடிவை மட்டும் எக்காரணம் கொண்டும் எடுக்காதீங்க! - சிவகுமார்

    By Shankar
    |

    ஈரோடு: எந்தக் காரணம் கொண்டும் தம்பதிகள் விவாகரத்து முடிவுக்கு மட்டும் வந்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார் நடிகர் சிவகுமார்.

    ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்த புத்தக திருவிழாவில் 'வாழ்க்கை ஒரு வானவில்' என்ற தலைப்பில் பேசினார் நடிகர் சிவகுமார்.

    அவர் தனது பேச்சில், "குடும்ப வாழ்க்கை என்பது உன்னதமான வாழ்க்கை. ஒருவன் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதன் மூலம்தான் அவன் முழு மனிதன் ஆகிறான்.

    Dont come to divorce decision - Sivakumar

    இப்படி திருமண வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்களில் பலர் மனைவி என்ற உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. மனைவியை பலர் அடிமைத்தனமாகவே நடத்துகிறார்கள். இந்த அவலநிலை அடியோடு மாற வேண்டும்.

    இன்னைக்கு ஒரு வீட்டில் அதிகாலை 5.30 மணிக்கு 'லைட்' எரிகிறது என்றால் அந்த வீட்டில் ஒரு பெண் சமைத்து கொண்டிருப்பாள். அவர் 2 குழந்தைகளுக்கு தாயாகவும் இருக்கலாம். 70 வயது மூதாட்டியாகவும் இருக்கலாம்.

    அந்த பெண் தானும் வேலைக்கு போய், வேலைக்கு போகும் கணவனுக்கும், பள்ளிக்கூடம் போகும் தனது குழந்தைக்கும் காலையிலேயே எழுந்து சமைக்கிறாள். இப்படி அதிகாலையிலேயே நமக்காகவும், நம் குடும்பத்துக்காகவும் உழைக்கும்... பாடுபடும் பெண்களுக்கு நாம் என்ன கைமாறு செய்கிறோம்?

    அட, பாராட்ட வேண்டாமுங்க... சமையலில் குறை சொல்லி அது சரியில்லை.. இது சரியில்லை.. என்று திட்டாமல் இருந்தாலே போதுமுங்க.

    நான் இன்றைக்கு முழு மனிதனாக உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் தாய். அதற்கு அப்புறம் என் மனைவியே காரணம். திருமணத்துக்கு பிறகு இருவரும் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொண்டு வாழ வேண்டும். எந்த குழந்தைகள் பிறந்தாலும் அந்த குழந்தைகள் நமக்கு வந்துள்ள புது உறவுகளாக பாவிக்க வேண்டும்.

    குடும்ப உறவுகளை மதிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விவாகரத்து என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. இங்கே வந்திருக்கும் பல பெண்களுக்கும் முக்கியமாக ஒன்றை சொல்லி கொள்கிறேன். உங்களது மருமகள் வந்து விட்டால் அவளிடம் கொத்து சாவியை கொடுத்து விடுங்கள். அவள் ஒன்றும் அந்த சாவியை எடுத்து கொண்டு ஓடிவிட மாட்டாள்.

    வாழ்க்கையை நாம் முழுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக குடும்ப உறவுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார்.

    English summary
    Actor Sivakumar has appealed the youngsters not to take the decision of divorce for any reasons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X