twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசையில் வன்முறையை எதுக்குய்யா புகுத்தறீங்க? - இளையராஜா

    By Shankar
    |

    சென்னை: இசையில் வன்முறையைப் புகுத்தாதீர்கள் என்று இசைஞானி இளையராஜா கேட்டுக் கொண்டார்.

    ஈழப் போரில் சிங்கள ராணுவத்தால் சிதைத்துக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கையை, போர்க்களத்தில் ஒரு பூ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளனர்.

    இந்தப் படத்தை தெலுங்குத் தயாரிப்பாளர் குருநாத் சல்சானி தயாரித்துள்ளார். கன்னடத்தில் பல படங்கள் இயக்கிய கு கணேசன் இயக்கியுள்ளார்.

    ஒரு தமிழ்ப் பெண் போராளியின் வீர வரலாற்றைப் பதிவு செய்ய ஒரு தமிழ்த் தயாரிப்பாளர் கூட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இளையராஜா

    இளையராஜா

    இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 5 பாடல்கள். ஈழ மண்ணில் நேர்ந்த கோர அவலங்களை தன் குரலிலேயே ஒரு பாடலாகப் பதிவு செய்துள்ளார் இளையராஜா. பாடலைக் கேட்ட அத்தனைபேரும் கண்கலங்கிவிட்டனர்.

    இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

    ஒப்புக் கொண்டேன்

    ஒப்புக் கொண்டேன்

    விழாவில் இளையராஜா பேசுகையில், "ஒரு படத்துக்கு இசையமைக்க நான் ஒப்புக்கொள்ள ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன்.. கேட்டவுடன் அந்தப் படத்தை ஒப்புக் கொள்ளலாம் என்று தோன்றியதும் சரி என்று சொல்லிவிடுவேன்.

    அப்படித்தான் இந்தப் படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் கணேசன் சொன்னதும் நான் ஒப்புக் கொண்டேன்.

    என்ன கைம்மாறு...

    என்ன கைம்மாறு...

    இதில் ஒரு பாட்டு, 'எனைத் தேடி வந்து கொஞ்சுகின்ற இசையே... கைமாறு என்ன நானுக்கு தருவேன்-னு ஆரம்பிக்கும். அது நானே எழுதிய வரிகள்தான். அதாவது என்னைத் தேடிவந்து, என் மூலம் வெளிப்படுகிற இசைக்கு நான் என்ன கைம்மாறு தரமுடியும். இசையை நான் தேடிப் போகவில்லை. அப்படியெல்லாம் போகவும் முடியாது. அதுதான் தேடி வரவேண்டும். அது என்னைத் தேடிவந்து என் மூலம் வெளிப்படுகிறது...

    என் பாட்டை விட்டா வேறு பாட்டில்ல

    என் பாட்டை விட்டா வேறு பாட்டில்ல

    இங்கே பேசிய பலரும் புத்தம் புதுக் காலை மாதிரி எனது பாடல்களில் ஏதாவது ஒன்றைக் கேட்ட பிறகுதான் அன்றைய நாளைத் தொடங்குவதாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் ஏதோ ஒரு பாட்டு நிச்சயம் இருக்கும். உங்களுக்கு என் பாட்டுதான். அதைவிட்டால் வேறு இல்லை.

    எதுக்குய்யா வன்முறை

    எதுக்குய்யா வன்முறை

    இந்த உலகில் இசைதான் ஒரு மனிதனுக்கு இதமான ஆறுதல். எந்த வன்முறையையும் சமாதானமாக்கும் வலிமை கொண்டது இசை. அதில் வன்முறைக்கு இடமே இல்லை. ஆனால் சிலர் வலிந்து வன்முறையைத் திணிக்கிறார்கள். ஒரு பாடலில் தேவையே இல்லாமல் ஒரு கடுமையான சத்தம் சேர்ப்பார்கள்.. இதுதான் வன்முறை. இசையில் எதுக்குய்யா வன்முறை?," என்றார்.

    English summary
    Maestro Ilayaraaja requested musicians do not impose violence in music.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X