twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸில் முஸ்லீம் மத நம்பிக்கையை இழிவுபடுத்துவதா?: சல்மான் மீது வழக்கு

    By Siva
    |

    மும்பை: முஸ்லீம்களின் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் கலர்ஸ் சேனல் மற்றும் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் சல்மான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

    பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது. நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

    இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    ஜன்னத்

    ஜன்னத்

    முஸ்லீம்கள் புனிதமாக கருதப்படும் ஜன்னத் என்னும் சொர்க்கத்திற்கு பிக் பாஸ் போட்டியாளர்களை அனுப்பி வைப்பது போன்று ஷூட் செய்துள்ளனர். இதை பார்த்த முஸ்லீம்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    புகார்

    புகார்

    இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் ஜன்னத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேலிக்கூத்தாக்கிவிட்டனர். அதனால் முஸ்லீம்களின் மத நம்பிக்கையை அவமதிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    வழக்குப் பதிவு

    வழக்குப் பதிவு

    முஸ்லீம்களின் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான் மற்றும் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் கலர்ஸ் சேனல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம்.

    ஏற்கனவே கசமுசா

    ஏற்கனவே கசமுசா

    பிக் பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூம்களில் ஆண்களும், பெண்களும் உறவு கொள்வதாக நடிகரும், தயாரிப்பாளருமான கேஆர்கே குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    It is told that FIR has been filed against Bigg Boss 7 host Salman Khan and management of Colours channel for allegedly insulting Muslim sentiment. The contestants were sent to Jannat or Jahannum in the Bigg Boss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X