twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யுவனை அன்று ராஜாவிடம் தந்தேன்... இன்று திரும்பப் பெற்றுக் கொண்டேன்! - வைரமுத்து

    By Shankar
    |

    சினிமாபட்டியான கோடம்பாக்கத்தில் இன்று பரபரப்பாகப் பேசப்படுவது 'இளைய'ராஜா - வைரமுத்து புதிய கூட்டணிதான்!

    அதாவது இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் போட்டுள்ள கூட்டணி.

    இசைஞானி ஆசி இல்லாமலா?

    இசைஞானி ஆசி இல்லாமலா?

    லிங்குசாமியும், சீனி ராமசாமியும் இணைந்து செய்த முயற்சியால் அமைந்த கூட்டணி இது என்றாலும், மூலவரான இளையராஜா ஆசியில்லாமல் இது நடக்க வாய்ப்பே இல்லை என்பதால், இசைஞானி ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

    மலரும் நினைவுகளில் வைரமுத்து

    மலரும் நினைவுகளில் வைரமுத்து

    யுவனுடன் கூட்டணி என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து வைரமுத்துவின் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டன மீடியாக்கள். அவரும் இந்த சந்தோஷத்தை அனைவரிடமும் பகிர்ந்து வருகிறார்.

    இளையராஜாவின் புதுக் காரில்...

    இளையராஜாவின் புதுக் காரில்...

    விகடனுக்கு அளித்த பேட்டியில் அவர் யுவனை மடியில் வைத்துக் கொஞ்சிய நாட்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார்...

    ''யுவனுக்கு நினைவிருக்க வாய்ப்பு இல்லை. இளையராஜா, ஒரு புது கார் வாங்கியிருந்தார். அதில் முதல் சவாரி சென்றோம்.

    என் மடியில் யுவன்

    என் மடியில் யுவன்

    முன் இருக்கையில் நான். என் மடியில் யுவன். பின் இருக்கையில் இளையராஜாவும் அவரது துணைவியார் ஜீவாவும். அப்போது யுவன் மிகவும் சிறுவன்.

    ராஜாவிடம் தந்தேன்

    ராஜாவிடம் தந்தேன்

    ஆனால், அதிக கனம். இவரின் கனத்தைத் தாங்க முடியாத நான், 'உங்க பையனை நீங்களே வெச்சுக்குங்க' என்பது போல யுவனை அப்படியே அள்ளி, பின் இருக்கையில் இருந்த ராஜாவிடம் தந்தேன்.

    திரும்பப் பெற்றுக் கொண்டேன்

    திரும்பப் பெற்றுக் கொண்டேன்

    அன்று தந்த யுவனை இன்று திரும்பப் பெற்றுக் கொண்டேன்!''- வைரமுத்து இப்படிச் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்களாம் பக்கத்திலிருந்த யுவன் ஷங்கர் ராஜாவும் சீனுராமசாமியும்.

    English summary
    Vairamuthu has shared his flashback moments with Ilayaraaja and Yuvan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X