twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜில்லாவில் மோகன்லாலுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லையே: நேசன் வருத்தம்

    By Siva
    |

    சென்னை: ஜில்லா படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போனது என்று இயக்குனர் நேசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான ஜில்லா படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த விஜய் மீண்டும் இயக்குனர் நேசனுடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் படம் குறித்து நேசன் கூறுகையில்,

    இன்னும் சிறப்பாக

    இன்னும் சிறப்பாக

    ஜில்லா இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். ஆனால் திரைக்கதை மற்றும் படத்தின் நீளம் பிரச்சனையாகிவிட்டது. (படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் பத்து நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.)

    2 ஸ்டார்கள்

    2 ஸ்டார்கள்

    படத்தில் விஜய், மோகன்லால் என்று இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடித்தனர். அவர்கள் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுப்பது சற்று கடினமாக இருந்தது என்றார் நேசன்.

    மோகன்லால்

    மோகன்லால்

    மோகன்லால் போன்ற பெரிய நடிகருக்கு படத்தில் உரிய முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போய்விட்டது. என் கதையில் அவ்வளவு பெரிய நடிகருக்கு போதிய முக்கியத்துவம் அளிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார் நேசன்.

    வீரம்

    வீரம்

    நானும், இயக்குனர் வீரம் சிவாவும் சேர்ந்து எங்களின் படங்களை ஒன்றாக சேர்ந்து பார்க்கவிருக்கிறோம். அதன் மூலம் இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடம் இருந்து எங்களை காத்துக் கொள்வோம் என்று நேசன் நகைச்சுவையாக தெரிவித்தார்.

    விமர்சகர்களும்

    விமர்சகர்களும்

    ஜில்லா படம் பார்த்த விமர்சகர்களும் மோகன்லால் போன்ற ஒரு பெரிய நடிகருக்கு படத்தில் அவ்வளவாக வேலை இல்லாமல் போய்விட்டதே என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Neason regretted that he was not able to do complete justice to Mohanlal in his film Jilla.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X