twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயலலிதாவை பேரணியாக சென்று சந்தித்த சினிமா தொழிலாளர்கள்!

    By Mayura Akilan
    |

    சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை இன்று ஃபெப்சி அமைப்பின் தலைவர் அமீர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

    சினிமா தொழிலாளர்கள் சம்பளம் விவகாரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் ("பெப்ஸி') தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று பேரணியாக சென்று சந்தித்தனர். இந்த பிரம்மாண்ட பேரணியை இசையமைப்பாளர் இளையராஜா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான, பெப்சி சென்னை வடபழனியில் இயங்கி வருகிறது. இதில், 23 சங்கங்கள் உள்ளன. இன்று காலை, 10:30 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்கியது.

    டைரக்டர் அமீர் தலைமையில் துவங்கிய இந்த பேரணியில் வாசு, விக்ரமன், எஸ்.பி.முத்துராமன், ஜனநாதன் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களுடன் பெப்சியை சேர்ந்த 23 சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    இளையராஜா கொடியசைக்க

    இளையராஜா கொடியசைக்க

    பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பேரணியை காலை 8.30 மணிக்கு இசையமைப்பாளர் இளையராஜா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    பெப்சி தலைவர் அமீர்

    பெப்சி தலைவர் அமீர்

    தமிழக திரைப்பட தொழிலாளர்கள், ஸ்டண்ட் யூனியன், நடன கலைஞர்கள் உள்ளிட்ட பலரும், வெளிமா நிலங்களில் வேலைசெய்ய முடியாத சூழ்நிலை அந்தந்த மாநிலங்களில் உருவாகியுள்ளதால், திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்று அமீர் கூறியுள்ளார்.

    10 அம்ச கோரிக்கை

    10 அம்ச கோரிக்கை

    சினிமாத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண் டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்தி சொல்வதற்காக நேரம் ஒதுக்கித்தருமாறு திரைப்படத் தொழிலாளர்கள் கேட்டு இருந்தனர். இதனையடுத்து நவம்பர் 5 ம்தேதி திரைப்படத் தொழிலாளர்களை சந்திக்க நேரம் ஒதுக்கினார்.

    சம்பள உயர்வு பிரச்சினை

    சம்பள உயர்வு பிரச்சினை

    சினிமா மற்றும், டிவி சீரியல்களில் பணிபுரியும், இச்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்; சங்கங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்; சம்மேளனத்தில் உள்ள சங்கங்களுக்கு தொல்லை தருபவர்களின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சினிமா தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    போலீசார் மீது நடவடிக்கை

    போலீசார் மீது நடவடிக்கை

    சம்மேளன நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உட்பட, பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பெப்சி சார்பில், சென்னையில் இன்று இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

    வெற்றித் திருமகள்

    வெற்றித் திருமகள்

    முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பேரணியாக சென்ற தொழிலாளர்கள் தங்கள் கைகளில் வெற்றித் திருமகளிடம் வேண்டுதல் பேரணி என்ற மிகப்பெரிய பேனரை ஏந்தி சென்றனர்.

    செல்வமணியுடன் மன்சூர் அலிகான்

    செல்வமணியுடன் மன்சூர் அலிகான்

    பேரணியில் பிரபல சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் பங்கேற்றள்ளனர். கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரப்பனாக அறிமுகப்படுத்திய செல்வமணியை சந்தித்து பேசினார் மன்சூர் அலிகான்.

    முன்னாள் தலைவர்

    முன்னாள் தலைவர்

    பேரணியில் பங்கேற்ற முன்னாள் பெப்சி தலைவரும் ஸ்டண்ட் மாஸ்டருமான விஜயன்.

    ஆட்டம் பாட்டம்

    ஆட்டம் பாட்டம்

    பேரணியில் பங்கேற்ற திரைப்படத் தொழிலாளர்கள் பலர் கரகாட்டம் ஆடி மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

    அடையாளக் கொடி

    அடையாளக் கொடி

    40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும், சம்மேளனத்தை சார்ந்த தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடும் அடையாள கொடி ஒன்றினை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளனர்.

    பெயர் மாறிய பெப்சி

    பெயர் மாறிய பெப்சி

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பெயரை, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்று மாற்றவும் முடிவு செய்திருக்கிறோம்''என்றும் பெப்சி தலைவர் அமீர் கூறினார்.

    முதல்வரை சந்தித்தனர்

    முதல்வரை சந்தித்தனர்

    இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை ஃபெப்சி அமைப்பின் தலைவர் அமீர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

    முதல்வர் உறுதி

    முதல்வர் உறுதி

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீர், விக்ரமன் ஆகியோர்," சென்னையில் பகலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியுள்ளோம்.

    தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்" என்றனர்.

    வீரவாள் பரிசு

    வீரவாள் பரிசு

    எங்கள் கோரிக்கை வெற்றி விழாவை கலை நிகழ்ச்சியுடன் மட்டுமல்லாது, பெரிய விழாவாக நாங்கள் நடத்த உள்ளோம். ஏற்கனவே எங்களுக்கு பள்ளிக் கரணையில் 85 ஏக்கர் நிலம் ஒதுக்கியது அம்மாதான். அது சதுப்பு நிலம் என்பதால் வேறு இடம் கேட்டிருக்கிறோம்.

    ‘பெப்சி'யில் அங்கம் வகிக்கும் 23 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களின் பிரச்சினை தீர்க்கப்படும். நாங்கள் அம்மாவை சந்தித்தபோது அவருக்கு வீரவாள் பரிசாக கொடுத்தோம். அதற்கு அவர் இப்போது வேண்டாம். வெற்றி விழா நடத்தும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி விட்டார் என்றார் அமீர்

    English summary
    Maestro Ilayaraja flagged off the rally of FEFSI in Chennai today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X