twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழர்கள் புறக்கணிப்பு... அமெரிக்க தியேட்டரில் வெறும் 30 டாலர் மட்டுமே வசூலித்த இனம்!

    By Shankar
    |

    வாஷிங்டன் (யுஎஸ்): அமெரிக்காவில் இனம் திரைப்படம், வெளியிடப்பட்ட தியேட்டர்களுக்கு யாருமே வராமல் புறக்கணித்துவிட்டனர்.

    பதினான்கு தியேட்டர்களில் வெளியான இந்த படத்திற்கு, ஒருவர் கூட வராததால் மூன்று தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதி பதினோரு தியேட்டர்களில் மொத்தம் 2384 டாலர்கள் மட்டுமே வசூலானது.

    வெறும் 30 டாலர்கள்

    வெறும் 30 டாலர்கள்

    மில்பிடஸில் ஒரு தியேட்டரில் வெறும் 30 டாலர் மட்டும் வசூலானது இந்தப் படத்துக்கு.

    இனம் படத்தை வெளியிட்டுள்ள லிங்குசாமி, தமிழகத்தில்தான் இந்தப் படத்தை தியேட்டர்களிலிருந்து வாபஸ் பெற்றுள்ளார். ஆனால் வெளிநாடுகளில் படத்தை வாபஸ் பெறவில்லை.

    மொத்தமே 240 பேர்தான்

    மொத்தமே 240 பேர்தான்

    அமெரிக்காவில் வெளியான இந்தப் படத்தை மொத்தமே சுமார் 240 பேர் மட்டுமே பார்த்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் படத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காக சென்ற தமிழ் ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றபடி அமெரிக்கத் தமிழ் ரசிகர்கள் இனம் படத்தை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.

    கேவலமான தோல்வி

    கேவலமான தோல்வி

    இனம் படத்தின் படு பயங்கரமான தோல்வி அமெரிக்க திரைப்பட வினியோகிஸ்தர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    திரைப்பட உரிமைக்கான விலை போக, ஒவ்வொரு தியேட்டரில் வெளியிடுவதற்கான தொகையும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. இனம் படத்தை பொறுத்தவரை வெளியீட்டு செலவு உட்பட அத்தனை முதலீடும் நஷ்டம் என்ற ரீதியில் உள்ளதால், வினியோகிஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வசூல் விவரம்

    வசூல் விவரம்

    அமெரிக்கா முழுவதும் இனம் படத்திற்கான ஒரு வாரத்திற்கான வசூல் விவரம் (டாலர்களில்):

    சியாட்டல் 367

    டல்லாஸ் 352

    சான் ஓசே 320

    நியூ ஜெர்ஸி 276

    சான் அண்டோனியோ 270

    ஹூஸ்டன் 260

    சான்டியேகோ 202

    அட்லாண்டா 195

    சிகாகோ 57

    ராலி - டுர்ரம் 55

    மில்பிடஸ் 30

    எதிர்மறை விளம்பரம்...

    எதிர்மறை விளம்பரம்...

    பொதுவாக, தமிழகத்தில் பரபரப்புகளுக்கு உள்ளாகும் திரைப்படங்களுக்கு, எதிர்மறை விளம்பரங்கள் மூலம், ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்து, அமெரிக்காவில் முதல் நாள் வசூலில் நல்ல லாபம் கிடைக்கும்.

    பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளான விஸ்வரூபம், தலைவா படங்களுக்கு எதிர்ப்பார்த்ததை விட அதிகமான ஓப்பனிங் கிடைத்தது.

    புறக்கணிப்பு

    புறக்கணிப்பு

    இனம் படம் குறித்த சர்ச்சைகள் பெரிய அளவில் இணைய தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியான போதும், ரசிகர்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளார்கள்.

    படத்தில் இடம்பெற்ற காட்சிகளை குறித்து ஏற்பட்ட அதிருப்தியால்தான், சாதாரண திரைப்படங்களுக்கு கிடைக்கக்கூடிய ஆதரவு கூட கிடைக்காமல் போயிருக்கக்கூடும் என்று, அமெரிக்காவில் அதிக அளவில் வெளியிடும் திரைப்பட வினியோகிஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

    பெரிய அடி

    பெரிய அடி

    தமிழகம் தவிர சிங்கப்பூர் மலேசியா மற்றும் அமெரிக்காவில் மட்டுமே வெளியான இனம் படத்திற்கு, அமெரிக்கத் தமிழர்கள் கொடுத்த படு பயங்கரமான தோல்வி தமிழர்களின் இன உணர்வை சுட்டிக்காட்டுவதாகவே கருதப்படுகிறது.

    சர்ச்சைக்குரிய படங்களை வெளிநாடுகளில் திரையிட்டு வசூல் செய்துவிடலாம் என்று கணக்குப் போட்டு படங்களைத் தயாரித்து வந்தவர்களுக்கு, இனம் படத்துக்கு விழுந்த அடி ஒரு பெரிய எச்சரிக்கை.

    திரைப்பட விழாக்கள்

    திரைப்பட விழாக்கள்

    இனம் படத்தை எந்தத் திரைப்பட விழாவிலும் திரையிட முடியாத அளவுக்கு போராட்டங்களை முன்னெடுக்கவும் தமிழர் அமைப்புகள் தயாராகி வருகின்றன.

    -தகவல்: உதயன், டல்லாஸ்

    English summary
    Inam movie has grossed just 30 dollars in an US theater.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X